TamilSaaga

சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டே டெஸ்ட் அடிக்கலாமா? அதுக்கும் வழி இருக்கு? கம்மி செலவில் நல்ல லைஃப் வெயிட்டிங்!

சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருக்கும் ஊழியர்கள் அனைவருக்குமே எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறி விட வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் சிங்கப்பூர் வேலைக்கு வருவதற்கே ஏகப்பட்ட செலவுகள் செய்து கடன் வாங்கி தான் வந்திருப்பார்கள். வந்து வேலையை பார்த்து அந்த கடனை அடைக்கவே போதும் என்ற நிலை தான் இருக்கும்.

வெவ்வேறு வொர்க் பாஸ் கொண்ட சிங்கப்பூரில் அதிகம் ஏமாற்றாமல் வேலை கிடைப்பது என்னவோ ஸ்கில் முடித்த வொர்க் பெர்மிட் ஊழியர்களுக்கு தான். இதில் தற்போது சில மாதங்களாக பிரச்னை இருந்து வருகிறது. அதுவே உங்களை போல சிங்கப்பூர் வர வேண்டும் என நினைத்த சிலரால் தான். எப்படி என யோசிக்கிறீங்களா?

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலைக்கு வரும் தமிழர்களா நீங்க… அப்போ உங்களுக்கு இந்த Rules தெரியணும்… மிஸ் பண்ணாதீங்க அப்புறம் பர்சுக்கு செம வேட்டு தான்!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதற்கு என்று கோட்டா இருக்கும். அந்த கணக்கில் தான் வேலைக்கு ஆட்களை எடுக்க வேண்டும். இந்த கோட்டா ரிலீஸ் ஆக ஆக தமிழ்நாட்டில் இருக்கும் இன்ஸ்ட்டியூட்கள் உங்களை மெயின் டெஸ்ட் எழுத வைக்கும். அதை முடித்து விட்டு சிங்கப்பூர் வேலைக்கு வரலாம். ஆனால் இப்படி டெஸ்ட் அடித்து பாஸ் செய்த பலர் இன்னும் சிங்கப்பூருக்குள் வரவில்லை.

இதனால் கோட்டா நிரம்பியதாக கணக்கில் இருந்தும் ஆட்கள் இன்னமும் சிங்கப்பூருக்குள் எண்ட்ரி ஆகாமல் இருக்கின்றனர். மேலும், இந்தியாவை விட கம்மி சம்பளத்தில் மற்ற நாட்டு ஊழியர்களும் அதிகம் எடுப்பதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் டெஸ்ட் இன்ஸ்ட்டியூட்களில் தற்போது அட்மிஷன் மட்டுமே போடப்பட்டு வருகிறது.

நேரடியாக சிங்கப்பூருக்கு வந்து ஸ்கில் முடிக்க வேண்டும் என நீங்க நினைத்தால் TWP, TEPல் வரலாம். ஆனால் இந்த பாஸில் வரும் போது சிங்கப்பூர் கம்பெனி நிர்வாகம் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அது சிலருக்கு நடப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதிலும், செலவுகள் அதிகம் இருக்கும்.

இதையும் படிங்க: செலவே இல்லாமல் சிங்கப்பூர் போக job சைட்ஸ் இருக்கு? ஆனா ATSல் தப்பிக்க முடியுமா? Resume இப்படி பக்காவா இருந்தா? லட்சங்களில் சம்பளம் உறுதி!

இது இல்லாமல் pcm permitல் சிங்கப்பூர் வேலைக்கு வந்து விட்டு சில காலம் வேலை பார்த்து கொண்டே நீங்க ஸ்கில் டெஸ்ட் அடிக்க முடியும். இதனால் முதலில் சிங்கப்பூர் வருவதற்கு 2 லட்சத்துக்குள் செலவுகள் அடங்கி விடும். அடுத்து சிங்கப்பூரில் skill 3 நாட்கள் மட்டுமே நடக்கும். இதனால் தமிழ்நாட்டில் செய்யும் 45 முதல் 60 நாட்கள் பயிற்சி இங்கு இருக்காது. அதை போன்று சிங்கப்பூர் இன்ஸ்ட்டியூடில் டெஸ்ட் அடிக்க செலவுகளும் கூட 80 ஆயிரத்துக்குள்ளாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் இப்படி நீங்க ஸ்கில் அடித்து விட்டு வொர்க் பெர்மிட்டுக்கு மாற நீங்க வேலை செய்யும் கம்பெனியில் நீங்க ஸ்கில் அடித்த துறையில் வேலைவாய்ப்புகள் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது உங்களால் அந்த நிறுவனத்திலேயே வேலைக்கு மாறிக்கொள்ள முடியும். இதனால் சிங்கப்பூர் வேலைக்கு வரும்போதே கம்பெனி குறித்து தீர விசாரித்து விட்டு வேலைக்கு வருவதே சிறந்ததாக அமையும் என்று கூறப்படுகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts