தொழில்நுட்பம் விண்ணை தொடும் அளவிற்கு வளர்ந்துவிட்டாலும் இன்றளவும் உலக அளவில் உள்ள பல கோடி இளைஞர்கள் ஒரு நல்ல வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றார் என்ற கசப்பான உண்மையை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
சொந்த நாடாக இருந்தாலும் சரி வெளிநாடாக இருந்தாலும் சரி ஒரு வேலை கிடைக்க அவர்கள் படும்பாடு வார்த்தைகளுக்குள் அடங்காது. இருந்தாலும் குடும்ப சூழலை கருத்தில்கொண்டு கிடைத்த வேலையை செய்து வருகின்றனர் பல இளைஞர்.
நமது சிங்கப்பூரிலும் கூட இந்தியா உள்பட பல நாடுகளில் இருந்து வரும் இளைஞர்கள் குறைந்தபட்ச சம்பளத்தில் வேலை செய்து வருகின்றனர். அதற்கு ஒரே காரணம் அவர்களின் குடும்ப பின்னணி மட்டுமே. ஆனால் அப்படி ரத்தத்தை வியர்வையாக சிந்தி அள்ளும் பகலும் உழைத்த காசை வெகு சில ஊழியர்கள் சில சிற்றின்பத்திற்காக செலவு செய்யும் அவலம் இன்றளவும் சிங்கப்பூரில் நடந்துகொண்டு தான் வருகின்றது.
இது குறித்து சில நாடுகளில் இருந்த வரும் இளைஞர்கள் மட்டுமே செய்கின்றனர் என்று கூறிவிட முடியாது. காரணம் தன்னிலை மறந்து, குடும்பத்தை மறந்து செயல்படும் எல்லா நாட்டு இளைஞர்களும் இதை செய்துவருகிறார் என்பது தான் உண்மை.
சனி மற்றும் ஞாயிறு போன்ற வார இறுதி நாட்கள் வந்துவிட்டாலே சிங்கப்பூரில் அவர்கள் தேடிக்கொண்ட வெளிநாட்டு பெண் தோழிகளுடன் உல்லாச பயணம். அவர்களோடு மதுபான விடுதிகளில் விருந்து என்று கஷ்டப்பட சேர்த்த கொஞ்சம் பணத்தையும் கண்மூடித்தனமாக செலவு செய்கின்றனர்.
பொழுதுபோக்கு என்பது அவசியம் தான், ஆனால் இப்படி தீய வழியில் பொழுதுபோக்குவது என்பது அவசியமற்ற ஒன்று. இறுதியில் அவப்பெயரும் காலி Purse மட்டுமே அவர்களுக்கு மிஞ்சுகிறது. பெண் தோழிகளுடன் உல்லாசமாக காசை செலவு செய்யாமல் அவர்கள் தாய் தங்கைகளை எண்ணி அதை சேமியுங்கள்.
கிடைப்பது 1 வெள்ளியாக இருந்தாலும் சிறுக சிறுக சேர்த்தால் ஒரு நாள் நிச்சயம் அது பெருவெள்ளமாக மாறும். சூதாட்டம், குடி, பெண் தோழிகளுடன் தகாத நட்பு என்று வாழ்வதை விட ஒவ்வொரு வெள்ளியையும் திறன்பட சேமித்து வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும்.