ஜானகி சுதீர்.. சர்ச்சைக்கு பெயர் போன பெயர் இது. கேரள மக்களிடம் இவரது பெயரைச் சொன்னால், ‘அட.. அந்த பெண்ணா…’ என்று சொல்லும் அளவுக்கு நன்கு பரீட்சயமானவர். அல்லது பிரபலமானவர். இவரும், நடிகை அம்ரிதா என்பவரும் நடித்த தன்பால் ஈர்ப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட Holy Wound எனும் திரைப்படம், கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தீவிரமாக ஒருவர் மேல் வைக்கும் காதலுக்கு, பாலின பாகுபாடு ஒரு தடையில்லை என்பதை வலியுறுத்தும் விதமாக அப்படம் அமைந்தது.
இந்நிலையில், நடிகை ஜானகி சுதீர் சமீபத்தில் ஒரு ஃபோட்டோ ஷூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.
எல்லா நடிகையும் செய்யும் ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால், போட்டோவுக்கு இவர் எடுத்துக் கொண்ட கான்செப்ட் தான் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
ஆம்! மேலாடை எதுவும் அணியாமல் தனது மார்பகங்களை தங்க நகைகளை மட்டும் அணிந்து மறைத்துள்ளார்.
தலையில் மல்லிகைப்பூ, இடுப்பில் வெள்ளை வேஷ்டி அணிந்து, மார்பகத்தை நகைகளை கொண்டு மறைத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
‘உடலுக்கு ஏற்ற ஆடைகளை அணிந்து போஸ் கொடுப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’ என்று ஜானகி இதுகுறித்த விமர்சனங்களுக்கு பதிலும் கொடுத்திருக்கிறார்.
இவரின் தங்க நகை புகைப்படங்களுக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஆதரவும் குவிந்து வருகிறது.