TamilSaaga

சுற்றலா பயணிகளுக்கு தடுப்பூசி பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் – எச்சரிக்கும் நிபுணர்கள்

கொரோனா பெருந்தொற்று காரணமாக சுற்றுலாத் துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பயணங்களை துவங்குவது மற்றும் சுற்றுலாத்துறை மீள் வளர்ச்சிக்காக கோவிட்-19 தடுப்பூசி பாஸ்போர்ட் திட்டம் என்பது பற்றி பேசப்பட்டது.

இந்த கோவிட்-19 தடுப்பூசி பாஸ்போர்ட் என்பது ஒருவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டவரா இல்லையா என்பதை அறிய பயன்படும். உலகெங்கும் தடுப்பூசி செலுத்தும் பணி அதிகரிப்பதால் இது பயன்படும் என சிந்திக்கப்படுகிறது.

இதனால் சுற்றுலாத்துறை புத்துணர்வு பெரும் என்று பலதரப்பினரும், சுற்றுலா முகவர்களும் சிந்தித்தாலும் இதில் கவனக்க வேண்டிய பல விடயங்கள் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பைசர் பயோண்டெக், மெடர்னா போன்ற வகை தடுப்பூசிகள் நோய் தொற்றினை கட்டுப்படுத்தும் 90% செயல்திறனை கொண்டுள்ளது. அதுவே சினோவேக் தடுப்பூசியோ 51% செயல்திறனை மட்டுமே கொண்டுள்ளதாக WHO தெரிவித்துள்ளது.

“தடுப்பூசிகள் செயல் திறன் நிறுவங்களுக்கு ஏற்றார் போல் மாறுபடுவதால் சுற்றுலா செல்லும் நாட்டுக்கு ஏற்றார்போல் தகுந்த பாதுகாப்பை அது வழங்காது” என சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஜோகென் தெரிவித்துள்ளார்.

அதே போல் தொழில்துறை விரிவுரையாளர் டாக்டர் மைக்கெல் சியாம் “தடுப்பூசியின் செயல்திறன் எவ்வளவு காலம் நீடிக்கும், அதன் வகைகள் என்ன என்பதை உலக நாடுகள் ஆராய வேண்டும்” என கூறியுள்ளார்.

இவற்றையெல்லாம் ஆராய்ந்து பாதுகாப்புகளை உறுதி செய்த பின்பே பிற நாட்டின் தடுப்பூசி பாஸ்போர்ட்களை அனுமதிக்க வேண்டும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

Related posts