“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவைது எங்கும் காணோம்”, என்பது நமது புதுமைப்பித்தன் பாரதியின் பொன்மொழி. தமிழர்களே உரித்தான ஒரு கௌரவம் தான் பலநூறு ஆண்டுகள் தொன்மையான நமது மொழி. மொழி பேச பேசத்தான் வளரும் என்பார்கள் ஆனால் தற்போது நல்ல தமிழை பல இடங்களில் கேட்க முடிவதில்லை என்பது பலரின் வருத்தமாகவும் இருந்து வருகின்றது. குறிப்பாக நமது விமான பயணத்தில் பல மொழிகளில் அந்த விமானத்தின் விமானி பேசக்கேட்டிருப்போம். விமானம் பறக்கும் திசை, நேர அளவு, வேகம் உள்ளிட்ட பல விஷயங்களை அந்த விமானி நமது பயணத்தின்போது பகிர்ந்துகொள்வர்.
இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் S-Pass விண்ணப்பிப்பது எப்படி?
ஆனால் மலேசியா நாட்டில் இயங்கி வரும் ஒரு விமான சேவை நிறுவனத்தில் பணிபுரியும் சங்கர் என்ற விமானி, தமிழில் பேசி அந்த விமான பயணத்திற்கு மக்களை வரவேற்றது இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்ற அதே நேரத்தில் சில நெகடிவ் கமெண்ட்களும் வந்துள்ளது.
சிவசங்கர் விமானத்தில் பேசிய காணொளி
சங்கர் என்ற அந்த விமானி மலேசியா நாட்டில் உள்ள ஒரு விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். அப்போது பயணிகளை வரவேற்று அவர் வெளியிட்ட காணொளியை கண்ட வெகு சிலர். “இவர் யாருமில்லாத ஒரு விமானத்தில், வேண்டுமென்றே விளம்பரத்திற்காக தமிழில் பேசிய அதை காணொளியாக வெளியிட்டுள்ளார்” என்று கூறியுள்ளனர்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ள அவர் “30 இந்தியர்கள் உள்பட சுமார் 150 பயணிகள் பயணம் செய்த அந்த விமானத்தில் தான் தமிழில் பேசினேன். நான் செய்வது உங்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்துகின்றது என்றால் ரஜினி பணியில் சொல்கிறேன் நான் செய்கின்ற செயல் உங்களுக்கு கோவத்தை ஏற்படுத்தினால் நிச்சயம் அதை மீண்டும் செய்வேன்” என்று கூறியுள்ளார். அதேபோல தனக்கு ஆதரவாகவும் தமிழில் மொழியின் பெருமை அறிந்து கமெண்ட் செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.