TamilSaaga

இஸ்ரேலுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டும் சிங்கப்பூர்…505000 சிங்கப்பூர் டாலர்கள் நிதி உதவி அளிக்க முடிவு!

இஸ்ரேல் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சிங்கப்பூர் அரசு இணைந்து 505000 சிங்கப்பூர் டாலர் நிதி உதவி அறிவித்துள்ளன. சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் ஏற்கனவே 205000 நன்கொடை அளிப்பதாக அறிவித்ததை அடுத்து தற்பொழுது சிங்கப்பூர் அரசு 30000 டாலர் நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.

நிதி உதவியானது பாலஸ்தீனத்தில் உள்ள அனைத்து உலக செஞ்சிலுவை சங்கம் வாயிலாக அங்கு தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் உபயோகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்பு பணிகளுக்காக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் பொதுமக்களிடம் நிதி திரட்டும் முயற்சியை தொடங்க ஆரம்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் மீது தொடுக்கப்பட்ட திடீர் போரின் காரணமாக இதுவரை குழந்தைகள் உட்பட நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. பெரும்பாலும் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதால் இந்த போரைக் கண்டு உலக நாடுகள் அனைத்தும் கண்ணீர் வடிக்கின்றன. இஸ்ரேலில் வசிக்கும் மக்கள் மருத்துவ வசதிகள், நீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.மேலும் குடிப்பதற்கு ஒரு குவளை தண்ணீர் கூட இல்லாததால் வரிசையில் நின்று நீருக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த போரின் காரணமாக சுமார் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட குடிமக்கள் காசாவை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் மக்கள் தொடர்ந்து வெளியேற முயற்சி செய்து வருகின்றனர். நிதி உதவி அளித்ததோடு மட்டுமல்லாமல் மீட்பு பணிகளுக்கு தொடர்ந்து உதவும் வகையில் செஞ்சிலுவை சங்கம் தனது உதவிகளை செய்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts