பெருந்தொற்று, அதன் பிறகு டெல்டா தற்போது Omicron என்று கடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நம்மை இந்த வைரஸ் பாடாய்படுத்திவருகின்றது. இந்நிலையில் சிங்கப்பூரில் ஓமிக்ரான் மாறுபாட்டிற்கு மேலும் மூன்று பேர் முதற்கட்டமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று புதன்கிழமை (டிசம்பர் 15) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இந்த மூன்று வழக்குகளும் முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள். மற்றும் லேசான அல்லது அறிகுறிகள் இல்லாத நிலையில் இருந்துள்ளனர். தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : கரை ஒதுங்கிய 7 பேரின் சடலம், பலரை காணவில்லை
அதில் ஒருவர் அமெரிக்காவில் இருந்து தடுப்பூசி போடப்பட்ட பயண பாதை வழியாக சிங்கப்பூர் வந்த 36 வயது நபர் ஆவார். அமெரிக்காவில் டிசம்பர் 6ம் தேதி அவர் புறப்படுவதற்கு முந்தைய சோதனை மற்றும் டிசம்பர் 8ம் தேதி அவரது On-Arrival PCR சோதனை இரண்டும் எதிர்மறையாக இருந்தன. இருப்பினும், டிசம்பர் 10 அன்று அவர் மேற்பார்வையிடப்பட்ட ART சோதனையில் பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டார். அவரது PCR சோதனை முடிவும் டிசம்பர் 11 அன்று மீண்டும் நேர்மறையாக வந்தது. அவரது மனைவி தான் இரண்டாவது வழக்கு.
34 வயதான அவர் தனது கணவரின் நெருங்கிய தொடர்பு என அடையாளம் காணப்பட்டதால் கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 14) அன்று தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் கூடுதல் கவலை அளிக்கும் செய்தியாக இந்த ஜோடி இரண்டு நாட்களில் நான்கு உணவகங்களில் உணவருந்தியுள்ளனர். சிங்கப்பூரில் உள்ள Li Bai Cantonese Restaurant, மற்றும் டிசம்பர் 8ம் தேதி Palais Renaissanceல் உள்ள Merci Marcel இறுதியாக டிசம்பர் 9ம் தேதி Orchard Gatewayல் உள்ள Signs A Taste Of Vietnam Pho ஆகிய உணவகங்கள் ஆகும்.
“மேற்குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட வளாகத்திற்கு வரும் அனைத்து பார்வையாளர்களும் தங்கள் உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், முடிந்தவரை சமூக தொடர்புகளை குறைக்கவும், அவர்கள் வருகை அல்லது தொடர்பு கொண்ட நாளிலிருந்து 14 நாட்களுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்திக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்,” என்றார். MOH ஒரு அறிக்கையில் தெரிவித்தது.