TamilSaaga

“சிங்கப்பூரில் AGWO துணையுடன் புத்தாண்டை கொண்டாடிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” – MOM தகவல்

புது ஆண்டில் நாம் அடியெடுத்து வைத்துள்ள இந்த நேரத்தில் கடந்த ஆண்டு நமது சிங்கப்பூரில் தங்கி உழைக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மனிதவள அமைச்சகத்துடன் இணைந்து கொண்டாடிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது மனிதவள அமைச்சகம். MOM வெளியிட்ட முகநூளில் பதிவில் “AGWO என்று அழைக்கப்படும் Alliance of Guest Workers Outreach என்று நிறுவனம், எங்கள் Dormitory ஒன்றில் கிறிஸ்துமஸ் மரத்தை அமைத்து, எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பராமரிப்புப் பாக்கட்களை விநியோகித்தது.

இதையும் படியுங்கள் : பொருளாதார வளர்ச்சி.. Mass காட்டும் நம்ம சிங்கப்பூர்

Dormitory ஆபரேட்டரான McKnight Engineering Pte Ltd உடன் இணைந்து, அவர்கள் சிங்கப்பூர் ஃப்ளையர் மற்றும் புத்தாண்டு ஈவ் பயணத்தில் எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் அழைத்து சென்றனர். மேலும் வெஸ்ட்லைட் டோ குவானில், விளையாட்டுகளுடன் கூடிய ஒரு மினி திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. “சாண்டா கிளாஸ்” வேடமணிந்த தன்னார்வலர்கள் பரிசுகளை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கினார்கள்.

கூடுதல் சிறப்பாக சிங்கப்பூர் நார்த்லேண்ட் ஆரம்பப் பள்ளி மாணவர்களும் நமது தொழிலாளர்களுக்கு அவர்கள் மனதைக் கவரும் நிகழ்ச்சியை அர்ப்பணித்தனர். எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர் நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாட முன்வந்த பலதரப்பட்ட கூட்டாளிகளைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் தொழிலாளர்களை நினைத்து அவர்களுடன் பண்டிகை மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.!.

இதையும் படியுங்கள் : 30 வெள்ளி மதிப்புள்ள வவுச்சர்கள் – பயனடையும் 2,80,000 சிங்கப்பூர் குடும்பங்கள்

இந்தப் புத்தாண்டில் உங்களுடன் மேலும் பல செயல்பாடுகளைத் தொடர்ந்து திட்டமிட நாங்கள் எதிர்நோக்குகிறோம். என்று மனிதவள அமைச்சகம் வெளியிட்ட அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்

Related posts