TamilSaaga

சிங்கப்பூர் MasterChef நிகழ்ச்சியின் சீசன் 3.. நேற்று முதல் கோலாகல ஆரம்பம்.. போட்டியில் கெத்தாக களமிறங்கும் “தமிழர்கள்”

MasterChef நிகழ்ச்சி உலக அளவில் புகழ்பெற்ற ஒரு நிகழ்ச்சி என்பதை நாம் அறிவோம், அண்டை நாடான இந்தியாவில் உள்ள நமது தமிழகத்திலும் இந்த நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. பிரபல நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிங்கப்பூரர்கள் பலரும் எதிர்பார்த்த Master chef சிங்கப்பூரின் மூன்றாவது சீசன் இறுதியாக வந்துவிட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (மே 1) முதல் எபிசோட் ஒளிபரப்பப்பட்ட பிறகு, முதல் 12 போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.

இந்த 12 பேர்களுக்கு நடுவில் தான் Masterchef Singapore யார் என்ற போட்டி நடைபெறும், இந்த போட்டியின் இறுதியில் வெற்றி பெறுபவர் S$1,00,000க்கும் அதிகமான மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுகளுடன் வெளியேறுவார்கள்.

சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை.. அசத்தும் “தமிழச்சி” ஷவித்யா சண்முகம்.. 24 மணிநேரமும் மக்கள் சேவையில் – பெருமையோடு அறிவித்த SCDF

மேலும் இந்த 12 போட்டியாளர்களில் இரு சிங்கப்பூர் வாழ் தமிழர்களும் பங்கேற்று அசத்தவுள்ளனர், அவர்களின் விவரம் பின்வருமாறு.

ராஜ் சேகரன் மகாலிங்கம் வயது 58.

58 வயதானாலும் இதயத்தில் இளமையாக இருக்கும் மஹாலிங்கத்தின் ஆளுமை சமையலறையில் பிரதிபலிக்கிறது என்றே கூறலாம். ஒரு நாள் கடற்கரையில் தனது சொந்த உணவு டிரக் கஃபே தொடங்க வேண்டும் என்பது அவரது கனவு.

S “நரேஸ்” நரேஸ்கன்னா வயது 32

சமைப்பதில் நரேஸின் ஆர்வம் அவரது டீன் ஏஜ் நாட்களில் இருந்தே துவங்கியுள்ளது, சிறு வயதில் தனது பெற்றோர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது சமையல் அறைக்குள் பதுங்கிச் சென்று தனக்கான உணவுகளை இவர் தயாரித்துள்ளார்.

சமையல் உலகில் தனக்கென ஒரு பெயரைப் பெற விரும்புகிறார், சொந்தமாக சமையல் புத்தகம் ஒன்றை எழுதி தனது தந்தையை பெருமைப்படுத்த விரும்புகிறார் அவர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts