TamilSaaga

மக்கள் சேவையில் கணவன் – மனைவி.. இளைஞர்களின் ரோல் மாடலாக கலக்கும் வருண்குமார் ஐபிஎஸ் பற்றிய தொகுப்பு!

விஜய் தொலைக்காட்சியில் விரைவில் தொடங்கவுள்ள சீரியல் தென்றல் வந்து என்னைத் தொடும் இதன் ப்ரோமோ அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ப்ரோமோவில் கதாநாயகன் கதாநாயகியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று தாலி கட்டியது போல காண்பிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் பரவிய இந்த இந்த ப்ரோமோ வீடியோவைப் பார்த்த வருண் குமார் ஐ.பி.எஸ், இதுபோன்ற செயல்களுக்கு எதிரான சட்டங்களில் நீண்ட பட்டியலை சுட்டிக்காட்டி கடுமையான தண்டனைக்கு வழிவகுக்கும் எனவும் இதனால் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த ஒரே ட்வீட் தான் அடுத்த 2 நாட்களில் அவர் குறித்த தேடல்களும் பேச்சுகளும் இணையத்தில் உலாவ தொடங்கியது. அண்மையில் சென்னைக்கு மாற்றப்பட்ட ஐபிஎஸ் வருண் குமாரைப் பற்றி ராமநாதபுரம் மக்கள் நன்கு அறிவார்கள். ராமநாதபுரத்தில் ஒரு கொலை வழக்கு ஜாதி பிரச்சனையாக உருமாறிய போது அதை நுட்பமாக கையாண்டு அமைதியை நிலைநாட்டியவர். பாஜகவினரால் கடும் விமர்சனத்திற்கு உள்ளனார். இவர்களின் அழுத்ததால் தான் ராமநாதபுரம் எஸ்பி வருண் குமார் ஐபிஎஸ் சென்னைக்கு மாற்றப்பட்டதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த கொலைக்கு தனிப்பட்ட விரோதம் தான் காரணம் என்றும், தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் ராமநாதபுரம் எஸ்.பி. வருண் குமார் ஐ.பி.எஸ். டிவிட்டர் சமூக வலைதளம் மூலமாக தெரிவித்ததை தொடர்ந்து அங்கு அமைதி நிலைத்தது.

இந்த நிலையில் ராமநாதபுரம் எஸ்.பி. வருண் குமார் ஐ.பி.எஸ். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியாகின. அதன் பின்பு அவர் சென்னைக்கு மாற்றப்பட்டார். சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இளைஞர்களுடன் நேரலையில் உரையாற்றுவார்.

ராமநாதபுரத்தில் 13 வயது குழந்தைக்கு தக்க நேரத்தில் மருத்துவ உதவிகளை வழங்கி மக்களிடம் ஏகோபித்த பாராட்டுக்களையும் பெற்றார். இவரின் மனைவி ஐபிஎஸ் அதிகாரி வந்திதா பாண்டே ஆவர். வந்திதா பாண்டே கையாண்ட வழக்குகள் அவரை நாடு அறிய செய்தது.இவர்களுக்கு 5 வயதில் 1 மகன் இருக்கிறான். கணவன் மனைவி இருவரும் இணைந்து மக்கள் சேவையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Related posts