சொந்த நாட்டை விட்டு வெளியே சென்று தனது குடும்பத்திற்காக உழைக்கும் மக்கள் யாவரும் நிச்சயம் அந்நாட்டு அரசுடன் நல்ல ஆரோக்கியமான உறவுடன் இருக்க வேண்டும் என்பது பொதுவான ஒன்று. அதேபோலத்தான் நமது சிங்கப்பூரிலும், சிங்கப்பூரை மேலும் மேன்மைப்படுத்து பல நாடுகளில் இருந்து பல லட்சம் தொழிலாளர்கள் இங்கு வந்து பணி செய்து வருகின்றனர். நமது சிங்கப்பூர் அரசும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய எப்போதும் தயங்குவதில்லை.
இதையும் படியுங்கள் : தமிழகம் – சிங்கப்பூர் சேவைகளை தொடங்கும் Indigo
அந்த வகையில் சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிச்சயம் தெரிந்துவைத்துக்கொள்ளவேண்டிய சில சிங்கப்பூர் உதவி எண்களை இந்த பதிவில் நாம் காணலாம். இவை நிச்சயம் ஏதோ ஒரு சமயத்தில் நமக்கு அல்லது நமக்கு தெரிந்தவர்களுக்கு பயன்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
மனிதவள அமைச்சகம் : நல்வாழ்வு, சம்பளம் பற்றிய உதவி மற்றும் ஆலோசனைக்கும் இன்னும் பிற வேலை தொடர்பான விஷயங்கள் குறித்து அறிய 1800 339 5505 என்ற எண்ணை அழைக்கலாம். இது பிரத்தியேகமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.
ACMI எனப்படும் (Archdiocesan Commission for the Pastoral Care of Migrants and Itinerant People) ஆயர் பராமரிப்புக்கான உயர் மறைமாவட்ட ஆணையம் புலம்பெயர்ந்தோர் மற்றும் பயணம் செய்யும் மக்கள் (ACMI) என்ற குழுவை 9188 9162 என்ற இந்த எண்ணில் அழைக்கலாம்.
வேலைவாய்ப்பு முகவர் சங்கம் (சிங்கப்பூர்), இந்த நிறுவனத்தை தொடர்புகொள்ள 6836 2618 என்ற எண்ணில் அழைக்கலாம்.
FAST எனப்படும் (Foreign Domestic Worker Association for Social Support and Training) சமூகத்திற்கான வெளிநாட்டு வீட்டுப் பணியாளர் சங்கம் ஆதரவு மற்றும் பயிற்சி நிலையத்தை 1800 339 4357 என்ற எண்ணில் அழைக்கலாம். (24 மணிநேர சேவை)
சிங்கப்பூரின் சமாரியர்கள் எனப்படும் Samaritans of Singapore (SOS) என்ற நிறுவனத்தை என்ற 1800 221 4444 எண்ணில் அழைக்கலாம். (24 மணிநேர சேவை)
CDE எனப்படும் Centre for Domestic Employees வீட்டுப் பணியாளர்களுக்கான மையத்தை 1800 2255 233 என்ற எண்ணில் அழைக்கலாம். (24 மணிநேர சேவை)
சிங்கப்பூர் போலீசை தொடர்புகொள்ள 999 என்ற எண்ணையும், சிங்கப்பூர் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறையை அழைக்க 995 என்ற எண்ணையும் அழைக்கலாம்.
தூதரகம் மற்றும் உயர் கமிஷனை அழைக்க…
இந்தியா – 9172 9803
இலங்கை – 6254 4595
பங்களாதேஷ் – 6255 0075
பிலிபைன்ஸ் – 6737 3977
கம்போடியா – 6341 9785
மியான்மார் – 6735 1672
இந்தோனேஷியா – 6737 7422
தாய்லாந்து – 6737 2475