TamilSaaga

சிங்கப்பூரில் தடுப்பூசி போடும் வேகம் குறைவு.. இது போதாது – அமைச்சர் வோங்

கொரோனா நோய்த் தொற்று குறிப்பிட்ட பகுதி அல்லது வட்டாரத்தில் மீண்டும் மீண்டும் ஏற்படும் ஒரு நோயாக மாறலாம் என பலர் கூறி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் சிங்கப்பூரின் ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதுகாப்பை வழங்கும் அளவுக்கு தடுப்பூசி போடும் வேகம் அதிகமாக இல்லை என அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

எனவே கொரோன தொற்றுக்காக அதிகத்துக்கும் மிஞ்சிய நடவடிக்கைகள் எடுப்பதை காட்டிலும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

சிங்கப்பூரின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் தளர்வு அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை அவர்களை போல அரசும் விரும்புகிறது.

ஆனாலும் ஒட்டுமொத்த மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வேகத்தில் தடுப்பூசி போடப்படவில்லை அதன் விகிதம் குறைவாக உள்ளதாக லாரன்ஸ் வோங் கூறுகிறார்.

ஜீன் மாதம் 15 தேதி வரை 4.7 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அதில் ஏறத்தாழ 2.7 மில்லியன் மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி மட்டும் போடப்பட்டுள்ளன.

வயது முதிர்ந்தோர்க்கு தடுப்பூசி போடும் விகிதம் அதிகரித்தாலும் அவை போதுமான அளவு இல்லை. 70 வயதுக்கு மேற்பட்ட எளிதில் தொற்றால் பாதிக்கக்கூடியவர்கள் இன்னும் அதிக அளவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

எனவே இது போன்ற சூழலில் தளர்வுகளை அதிகப்படுத்தினால் தொற்று அதிகரித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதயெல்லாம் கருத்தில் கொண்டே அரசாங்கம் கவனத்துடன் செயல்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts