TamilSaaga

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைக்கு வரும் தமிழர்கள் – வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான ஆணையம் சொல்வது என்ன?

உலக அளவில் பிற நாடுகளுக்குச் சென்று வேலை பார்க்கும் மக்களின் எண்ணிக்கையானது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக வீட்டு வேலைகளுக்கும் ஓட்டுநர் வேலைகளுக்கும் மற்றும் பல்வேறு ஆரம்பநிலை வேலைகளுக்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் பிற நாடுகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் முறையான ஆவணங்கள் இல்லாத நிலையிலும், முறையான முகவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு செல்லாத நிலையிலும் பணியிடங்களில் அவர்களுக்கு மிகப்பெரிய இன்னல்கள் வந்து சேர்கின்றன. இந்த சூழ்நிலையில் இவற்றை தடுக்க அண்டை நாடான இந்தியாவின் தமிழக அரசு வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கான ஆணையம் உதவி வருகிறது. இந்த ஆணையம் கூறவருவது என்னவென்றால் வெளிநாடுகளுக்கு வேலை செய்பவர்கள் முதலில் முறையாக அரசிடம் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் மட்டுமே செல்ல வேண்டும்.

ஆகவே வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவோம் என்று உறுதி அளிக்கும் நிறுவனங்கள் முதலில் Protector of Emigrants என்ற சென்னை அண்ணா சாலையில் உள்ள அலுவலகத்தில் அந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அப்படி பதிவு செய்த நபரை அணுகி வேலை கிடைக்கும் பட்சத்தில் வெளிநாட்டு தமிழர்களுக்கான ஆணையத்தில் பிரத்தியேக பயிற்சி அளிக்கப்படும்.

இதை மீறி ஒரு தமிழர் வெளிநாட்டிற்கு சென்று இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில் அவர்கள் முதலில் அவர்கள் தாயகத்தின் தூதரகத்தை அணுக வேண்டும். உலகின் எந்த நாடக இருந்தாலும் அந்த பணியாளர் தங்கள் தூதரகத்தை அணுக அனுமதி அளிக்கும். வெளிநாட்டில் இருக்கும்போது உங்களிடம் எப்போதும் உங்கள் வேலை ஆவணம் இருக்க வேண்டும். அதில் உங்களை குறித்த பல தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் நகலை கையில் எப்போதும் வைத்திருப்பது நல்லது.

வேலைக்கான விசா மற்றும் பிற ஆவணங்கள் கிடைக்கப்பெற்றதும், வெளிநாடு பயணிக்கும் முன்பு அந்த ஆவணங்களை ஊழியர்கள் ஒரு பிரதியெடுத்து தங்கள் குடும்பத்தின் ஒரு பிரதியை கொடுக்க வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்துகிறது. மேலும் பணிபுரியும் நாட்டில் இருந்து Exit விசா வாங்காமல் அவர்கள் நாட்டிற்கு திரும்ப குடுத்தது. மேலும் முறையான ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டில் பிற வேளைகளில் ஈடுபட கூடாது என்றும் ஆணையம் கூறுகின்றது.

Related posts