TamilSaaga

செயலியில் தொடங்கி இன்று சினிமாவில்.. – சன்னி லியோன் படத்தில் நடிகராக களமிறங்கும் G.P முத்து

கோலிவுட்டில் பிரபலமான நடிகர் சதீஷ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற தர்ஷா குப்தா ஆகியோர் இணைந்து நடிக்கும் ஒரு திகில் கலந்த காமெடி திரைப்படத்தை வீரசக்தி மற்றும் சசிகுமார் ஆகிய இருவரும் தயாரிக்கின்றனர். மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை யுவன் என்பவர் இயக்க ஜாவித் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் கூடுதல் சிறப்பாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஜி.பி முத்து அவர்களும் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பல துறைகளை சேர்ந்தவர்களும் திரைத்துறையில் சாதிக்க முடியும் என்பதை இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் பலர் நிரூபித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக யூடியூப் மற்றும் டிக் டாக் போன்ற தளங்களில் பிரபலமான நபர்களும் தற்போது திரைத்துறையில் சாதித்து வரும் நிலையில் டிக் டாக் செயலின் மூலம் பிரபலமடைந்த ஜி.பி முத்து அவர்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்நிலையில் சன்னி லியோன் நடிக்கவிருக்கும் இந்த திரைப்படத்தில் ஜி.பி முத்து அவர்களும் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts