TamilSaaga

சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஆசையா இருக்கீங்களா… IPA வந்தவுடன் ஒரிஜினலா செக் பண்ணிடுங்க… ஏஜென்ட் செய்யும் பித்தலாட்டம் எக்கசக்கம் தான்!

போலி ஏஜென்ட்கள் செய்யும் பித்தலாட்டங்கள் எக்கசக்கமாக அதிகரித்து விட்டது. ஏமாற்று வேலையில் எந்த லெவலுக்கு செல்கிறார்கள் என்பது தான் அதிர்ச்சிக்கரமானதாக மாறி இருக்கிறது. வீட்டின் பொருளாதாரத்தினை சரி செய்ய வேலைக்கு சிங்கப்பூர் வரும் ஊழியர்களின் தொகையை அடிக்க சில ஏஜென்ட்கள் பண்ணும் தில்லாலங்கடி வேளைகள் ஏகப்போகமாக நடந்து வருகிறது.

காசை ஏமாற்று விட்டு எஸ்கேப் ஆன ஏஜென்ட் கதை எல்லாம் பழசாகி விட்டது போல. ட்ரெண்ட்டை மாற்றியவர்கள் தற்போது வழங்கப்படும் IPA வையே போலியாக தயாரித்து அதன்மூலம் பல்கான தொகையை பார்க்கின்றனர். அதிலும் கம்பெனியின் பெயர் சிங்கப்பூரின் அகராதியிலேயே கிடையாது என்பது தான் இதில் மிகப்பெரிய அதிர்ச்சியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் மாஸ் காட்டிய தமிழ் சகோதர்கள்.. வக்கீல் அணியை வென்று கல்லா கட்டிய தருணம்… தமிழ்நாட்டின் ஒரே கிராமத்தில் இருந்து வந்த டீம்!

எப்போதுமே ஒரு ஊழியர் கையில் IPA கிடைத்தவுடன் அதில் இருக்கும் எண்ணை வைத்து MOM இணையதளத்தில் செக் செய்து பாருங்கள். உங்கள் விசா முறை ஆப்லைனில் அப்ளே செய்திருந்தால் உங்களுக்கு முதல் இரண்டு நாள் எந்தவித தகவலும் காட்டப்படாது. ஆனால் அதை தாண்டியும் தகவல் இல்லை எனக் காட்டினால் கண்டிப்பாக இது போலி தான் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

MOM தளத்தில் செக் செய்தால் தெரிந்து விடும் என்கிறார்களா அப்போ இதையும் தெரிந்து கொள்ளுங்கள். எப்போதுமே இணைய முகவரிக்கு போகும் போது அது சரியானது தானா என்பதையும் செக் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் MOM முகவரிக்கே போலி நிறைய உலா வருகிறது. மேலும், MOM தளத்தில் இருந்து IPA ஒன்றினை டவுன்லோட் செய்கிறார்கள். அதில் உங்க பெயர், போலி கம்பெனி மற்றும் ரிலீஸான தேதியை மாற்றி தந்து விடுகின்றனர். இந்த சின்ன ட்ரிக்கை வைத்தே பலர் 3 லட்சத்துக்கும் அதிகமாக கொள்ளை அடித்து வருகின்றனர். இதனால் எப்போதுமே IPA வாங்கிய பின்னர் MOM தளத்தில் பதிவிட்டு உங்கள் தகவல்கள் சரிதானா என செக் செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் கிடைத்த வேலை… ஒரேநாளில் வாழ்க்கையை புரட்டிப்போட்ட அந்த “சம்பவம்”.. 10 வருடம் “ஒன்மேன் ஆர்மி’யாக போராடிய ஊழியர்!

இதுமட்டுமல்லாது, IPA வை செக் செய்யும் போது தகவல்கள் சரியானது எனக் காட்டும். ஆனால் அதன் பெயர் வேறாக இருக்கும். இதனை தடுக்க வாங்கியவுடன் முழுதாக உட்கார்ந்து படித்து விடுங்கள். இப்படி ஏகப்பட்ட பித்தலாட்டங்களை ஏஜென்ட் சிலர் செய்து வருகின்றனர். இது ஒன்று இல்ல இரண்டு தான். ஏகப்பட்ட வழிகள் வைத்து இருக்கிறார்கள்.

இதில் தமிழக இளைஞர்கள் நிலையை நினைத்து பாருங்கள். சிங்கப்பூரில் விசா அப்ளே செய்ய அதிகப்பட்சமாக $180 சிங்கப்பூர் டாலர் வரை தான் கேட்கப்படுகிறது. இதனை மனதில் வைத்து விசாவை சரி பார்த்த பின்னர் அவர்கள் கேட்ட மிச்ச தொகையை கொடுப்பதே உங்களுக்கும் நல்லது. வெறும் 10 ஆயிரத்தினை கொடுங்கள். இதில் ஏமாற்றம் நடந்தால் உங்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் பெற எங்களது முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க”

Related posts