TamilSaaga

சிங்கப்பூர் Box Office டாப் 10 லிஸ்டில் “வலிமை” முதலிடம் – பிரமிக்க வைக்கும் Report வெளியீடு

அண்டை நாடான இந்தியாவில் உள்ள தமிழகத்தை பொறுத்தவரை திறமைவாய்ந்த நடிகர்கள் பலர் உண்டு. அதிலும் குறிப்பாக “அல்டிமேட் ஸ்டார்” ஸ்டார் என்ற பட்டதில் இருந்து தனது கடின உழைப்பால் இன்று ரசிகர்கள் அன்போடு தல என்று அழைக்கும் அஜித் குமார் அவர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். இந்நிலையில் தான் சுமார் மூன்று ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்னர் அவருடைய வலிமை திரைப்படம் அண்மையில் உலக அளவில் பல நாடுகளில் வெளியானது.

பாஸ்போர்ட் இல்லை, VTL Apply செய்யவில்லை : செலவில்லாமல் சிங்கப்பூர் to ஜோகூர் பயணம் – இது பலே வேலை தான்!

மூன்று ஆண்டு காத்திருப்புக்கு தல எங்களுக்கு ஒரு மறக்கமுடியாத விருந்தினை வலிமை மூலம் கொடுத்துள்ளார் என்று ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். விமர்சன ரீதியாக சில குறைகளை பலர் முன்வைத்தாலும் ஹாலிவுட் தரத்தில் அமைந்திருக்கும் சண்டை காட்சிகள் தான் படத்தின் ஹ-லைட் என்கின்றார்கள் ரசிகர்கள். தமிழகத்தில் மட்டும் வலிமை திரைப்படம் முதல் நாள் வசூலாக 36 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என்று கூறப்படுகிறது. H. வினோத் இயக்கத்தில் போனி கப்பூர் தயாரிப்பில் தல அஜித் இணைத்துள்ள இந்த வலிமை திரைப்படத்திற்கு அடுத்தபடியாக மூன்றாவது முறையாக இதே காம்பினேஷன் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலக அளவில் வெளியாகி வெற்றிகரணமாக ஓடிக்கொண்டிருக்கும் வலிமை திரைப்படம் நமது சிங்கப்பூரிலும் ஒரு தனி சாதனை படைத்துள்ளது என்றே கூறலாம். ஆம் நமது சிங்கப்பூர் Box Office டாப் 10 பட்டியலில் வலிமை முதலிடம் பிடித்துள்ளது.

Bheemla Nayak
Uncharted
Death on the Nile
Don’t Forget I Love you
Black Light
The Batman
Ah Girls Go Army
My Best Friend’s Breakfast
2gether : The Movie

“மற்றவர்களுடன் ஏன் படுத்து தூங்குற?” – சிங்கப்பூரில் சக ஊழியரின் விரலை கடித்துத் துப்பிய இந்தியர் – “கண்றாவி” பிரச்சனைக்கு 10 மாத சிறை

உள்ளிட்ட திரைப்படங்கள் அந்த பட்டியலில் 2 முதல் 10 இடங்கள் வரை பெற்ற நிலையில் வலிமை முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. கடல் கடந்து நமது சிங்கப்பூரிலும் வலிமை படம் டாப் லிஸ்டில் உள்ளதை AKயின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts