சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கு வியட்நாமில் இருந்து வந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த மூவரிடம் இருந்து சுமார் 31000 ரூபாய் சிங்கப்பூர் டாலர் திருடு போனதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சீன நாட்டைச் சேர்ந்த 52 வயதான முதியவர் மீது சந்தேகத்தின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 16ஆம் தேதி காலை ஒன்பதரை மணிக்கு மேல் 12 மணிக்குள் பணம் திருடப்பட்டு உள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பறந்துகொண்டு வந்த விமானத்தில் பயணித்த பயணிகள் வைத்திருந்த ஹேண்ட் பேக்கில் இருந்து பணம் திருடு போனதாக கூறப்பட்டுள்ளது. சிறிது நேரம் கழித்து பணம் தொலைந்து போனதை உணர்ந்த பயணிகள் மூவரும் உடனடியாக செயல்பட்டு புகார் அளித்தனர். மேலும் சந்தேகத்தின் பெயரில் தங்களது அருகில் வந்த நபர் தான் திருடி இருக்க வேண்டும் என உறுதி செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கானது டிசம்பர் 22ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது மேலும் சீன நபரின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.