ஏன்யா இப்படி? நாங்க ஏன் சிங்கப்பூரு பெண்ணை கல்யாணம் பண்ணப்போறோம்? என்று சொல்லும் நண்பர்களுக்கு ஒரு தகவல்…. அரிச்சுவடி கூட தெரியாமல் சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்து, திறம்பட வேலையைக் கற்று அப்படியே சிங்கப்பூர் பெண்ணையும் காதலித்து திருமணம் செய்தவர்களின் லிஸ்டை எடுத்தால், ஒரு முழு Long Size நோட் தேவைப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சரி.. விஷயத்துக்கு வருவோம்…
நீங்கள் தற்போது சிங்கப்பூரில் Work Permit-ல் பணிபுரியும் ஊழியராக இருந்தாலும் சரி.. இதற்கு முன்பு Work Permit-ல் பணிபுரிந்தவராக இருந்தாலும் சரி.. நீங்கள் சிங்கப்பரின் குடிமகள் அல்லது PR (நிரந்தர குடியிருப்பாளரை) திருமணம் செய்ய விரும்பினால் மனிதவளத் துறையின் (MOM) ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இருப்பினும், கீழ்க்கண்ட நபர்கள் MOM-யின் ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
இப்போது EP அல்லது S பாஸ் வைத்திருப்பவர்கள்.
இப்போது பணியில் இல்லை என்றாலும், கடைசியாக EP அல்லது S பாஸ்-ல் சிங்கையில் வேலைப் பார்த்தவர்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
MOM-யிடம் ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க, கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஆவணங்களின் தெளிவான நகல்களை வழங்க வேண்டும். மேலும் அவற்றை 1 zip file-ஆக இணைத்து தொகுக்க வேண்டும்.
திருமணம் செய்ய விரும்புபவர்கள் | சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் |
இப்போது Work Permit-ல் பணிபுரிபவர்கள் அல்லது இதற்கு முன் Work Permit-ல் பணிபுரிந்தவர்கள் | சிங்கப்பூர் குடிமகன் அல்லது PR திருமணம் செய்வதற்கான விண்ணப்பத்திற்கான Declaration படிவம் (இரு தரப்பினராலும் கையொப்பமிடப்பட வேண்டும்) பாஸ்போர்ட் தனிப்பட்ட விவரங்கள் பக்கம் அல்லது பணி அனுமதி அட்டை (Work Permit Card) தற்போதைய அல்லது சமீபத்திய நிறுவனத்தில் பணியாற்றிய கடந்த 6 மாத Pay Slips கல்விச் சான்றிதழ் நீங்கள் எப்போதாவது வேறு பெயரைப் பயன்படுத்தி சிங்கப்பூருக்குள் நுழைந்திருந்தால், பெயர் மாற்றத்தைச் சான்றளிப்பதற்கான சட்டப்பூர்வ ஆவணம் |
இப்படி அனைத்தும் சட்ட முறைப்படி சரியாக இருந்தால், சிங்கப்பூர் பெண்ணை நீங்கள் கண்டிப்பாக திருமணம் செய்ய முடியும்.