TamilSaaga

சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்து.. ஓசியில் ஓனர் பணத்தில் காதலனை கைப்பிடித்த பெண் – வயிற்றில் “இரு கருவை” சுமந்து சேமிப்பையும் இழந்து நிற்கும் உரிமையாளர்

லாவகமாக திட்டம் போட்டு சிங்கப்பூருக்கு வேலைக்கு வருவது போல் வந்து, முதலாளியின் பணத்திலேயே தனது காதலனை சொந்த நாட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் ஒரு பலே பெண் ஊழியர்.

இந்த செய்தியை சிங்கப்பூரின் Mothership செய்தி நிறுவனம் தங்களது Exclusive செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில், அந்த பெண் ஊழியரை வேலைக்கு வைத்திருந்த ஓனர், Mothership-க்கு தன் வேதனையை கொட்டித் தீர்த்துள்ளார்.

அவர் பேசுகையில், “எனக்கு 36 வயது ஆகிறது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். என் கணவருக்கு 55 வயதாகிறது. 2021ல் அவருக்கு ஒருமுறை மாரடைப்பு ஏற்பட, இப்போது வரை அதற்கான மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டு வருகிறார்.

நாங்கள் இருவரும் பொறியாளர்களாக பணிபுரிகிறோம். ஆனால் உயர் பதவியில் இல்லை. ஒரு சாதாரண நடுத்தர குடும்பம் தான். குழந்தைகளின் கல்விக்காகவும், எங்களின் ஓய்வுக்காலத்திற்காகவும் இப்போதே சேமித்து வருகிறோம். அதுமட்டுமின்றி, இப்போது நான் இரட்டை குழந்தைகளை விரைவில் பிரசவிக்க உள்ளேன். கர்ப்பமாக இருக்கிறேன். நவம்பர் 3, 2022 மருத்துவமனையில் பிரசவத்துக்கு தேதி கொடுத்துள்ளனர்.

இந்த சூழலில் தான், கடந்த டிசம்பர் 2021 இல், இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணனை Ang Mo Kio-ல் உள்ள ஒரு ஏஜென்சி மூலம் வேலைக்கு அமர்த்தினோம். அந்த நேரத்தில் அப்பெண்ணின் வயது 31. எனது மூன்று வயது மகள் மற்றும் 10 மாத நாய்க்குட்டியை கவனித்துக்கொள்வது மற்றும் எனது வீட்டையும் பராமரித்துக் கொள்வது தான் அப்பெண்ணின் முதன்மை பணியாகும்.

முதலில் நான் வீட்டில் இருந்து வேலை செய்த நாட்களில், நாங்கள் இருவரும் நன்றாக பேசி வந்தோம். அதன் மூலம் இந்தோனேசியாவில் தனது குழந்தைகளின் கல்விக்காக கூடுதல் பணம் சம்பாதிப்பதற்காக அவர் சிங்கப்பூரில் வேலை செய்யத் தேர்வு செய்ததை நான் கண்டறிந்தேன்.

மேலும் படிக்க – அழுது அழுது வற்றிய கண்ணீர்.. சென்ற வருடம் தம்பியின் மரணம்… துக்கத்தோடு சிங்கப்பூரில் பணியாற்றிய அண்ணன் மகேஷும் பணியிடத்தில் பலி – அடுத்தடுத்து 2 மகன்களை இழந்து நிற்கும் பாவப்பட்ட குடும்பம்!

இந்த சூழலில் திடீர் திடீரென எப்போதாவது அவர் அழுவார். எங்கள் வீட்டில், ‘நீ சிங்கப்பூரில் வேலை செய்ய வேண்டாம் வந்துவிடு என்று சொல்கிறார்கள்’ என கூறுவார். நானும் ஒரு கட்டத்தில், நீ இந்தோனேசியாவிற்கே திரும்பி செல்கிறாயா என்று கேட்டேன். அதற்கு அவள் ஒன்றும் சொல்லாமல் உணர்ச்சிவசப்பட்டு அழுதாள்.

இப்படியே நாட்கள் செல்ல செல்ல, என் மூன்று வயது பெண் குழந்தையை கவனித்துக் கொள்ளும் திறன் அவளுக்கு இல்லை என்பதை நான் கவனித்தேன். என் குழந்தை சாப்பிடவோ குளிக்கவோ மறுத்தால், அதற்கு எப்படியாவது விளையாட்டு காட்டி சாப்பாடு ஊட்டும் பக்குவமோ, திறனோ அவளிடம் இல்லை. என் குழந்தை அழ ஆரம்பித்தால், அவள் அந்த இடத்தை விட்டே வெளியேறி விடுவாள்.

இதுகுறித்து நான் அவளிடம் வெளிப்படையாகவே கேட்டுவிட்டேன். அதற்கு அவள், “எனக்கு குழந்தை வளர்க்க தெரியாது. எனது குழந்தைகளையே நான் தூக்கி வளர்க்கவில்லை” என்று கூறிய போது என் தலையில் இடி இறங்கியது போல உணர்ந்தேன். இத்தனைக்கும் அவளது இரு பெண் குழந்தைகளில் ஒருவருக்கு 9 வயது, மற்றொருவருக்கு 11 வயது.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 25ம் தேதி நான் அலுவலகம் சென்ற பிறகு, காலை 10.30 மணியளவில் போலீசாரிடம் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது, எனது வீட்டுப் பணிப்பெண், 3வது மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக கூறினார்கள்.

அந்த நேரத்தில், எனது மகளுக்கு வயிற்றுப்போக்கு காரணமாக எனது கணவர் மருத்துவமனைக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் யாருமே இல்லாத போது, மாடியில் இருந்து அவள் எப்படி விழுந்தாள் என்று எனக்கு புரியவில்லை. வீட்டுக்கு ஓடோடி சென்று பார்த்தேன். ஒன்றும் புரியவில்லை.

மேலும் படிக்க – Engineering & Diploma முடித்தவர்களுக்கு South Korea-வில் வேலைவாய்ப்பு – சம்பளம் 1,50,000 முதல்

பிறகு அவள் NUH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். முதுகெலும்பு, இடது கணுக்கால் மற்றும் வலது காலில் காயங்கள் ஏற்பட்டிருந்தன. பிறகு போலீசார் இந்த வழக்கை MOM விசாரிக்கும் என்று கூறினர். முழு விசாரணைக்கு பிறகு, அப்பெண்ணின் வீட்டு முதலாளிகளான எங்கள் மேல் எந்த தவறும் இல்லை என்று நிரூபணமானதால், வேறு ஒரு நபரை வீட்டு வேலைக்கு அமர்த்துவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று MOM கூறியது.

பிறகு, NUH எங்களிடம் மருத்துவ செலவுக்கான பில் கொடுத்தார்கள். அதில் குறிப்பிடப்பட்டிருந்த தொகை S$40,000. ஒரு முதலாளியாக எந்த தவறும் செய்யாமலும், அந்த பில் தொகையை நாங்கள் தான் செலுத்தியாக வேண்டும்.

இந்த சூழலில், ஒருநாள் அப்பெண்ணை பார்க்க ஒரு நபர் வந்திருந்தார். விசாரித்த பிறகு தான் தெரிகிறது, அவர் அப்பெண்ணின் Boy Friend என்று. அவர்களுக்குள் ஏற்கனவே நன்கு அறிமுகம் இருந்திருக்கிறது. என்னிடம், ‘சிங்கப்பூரில் எனக்கு யாரையுமே தெரியாது’ என்று அப்பெண் கூறியிருந்தார்.

அப்போது தான், அப்பெண் ஏன் சிங்கப்பூர் வந்தார் என்பதே எனக்கு புரிய வந்தது. அவர் ஏற்கனவே சிங்கப்பூரில் வேலை செய்திருக்கிறார். அப்போதிலிருந்தே இந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இம்முறை எனது வீட்டு வேலைக்காக வருவது போல் வந்து, எங்கள் பணத்திலேயே காதலனையும் இந்தோனேசியா அழைத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறார். வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்தது எல்லாம் இதற்காகத் தான் என்பது தெரிய வந்தது.

அப்பெண்ணை மீண்டும் பத்திரமாக இந்தோனேசியா அனுப்பி வைக்க வேண்டியது எங்கள் கடமை என்பதால், அப்பெண்ணுக்கு, அவளது காதலனுக்கும் சேர்த்து விமான டிக்கெட் புக் செய்தோம். அந்த பையனும், தன்னிடம் ஒரு பைசா கூட இல்லையென்று கூறிவிட்டான். இதனால், அவனுக்கும் நாங்கள் தான் டிக்கெட் பதிவு செய்தோம். அப்போது, NUH-ல் இருந்து எனக்கு call செய்து, அப்பெண்ணுக்கு TB இருப்பதால் டிஸ்சார்ஜ் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர். டிக்கெட் கட்டணம் 800 டாலரும் அப்படியே வீணானது.

இதற்கிடையில் மருத்துவமனை கட்டணத்தை செலுத்த கால தாமதம் ஆனதால், எங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக நாங்கள் 66,670.05 சிங்கப்பூர் டாலர்கள் செலுத்த வேண்டும் என்று பில் கொடுக்கப்பட்டது. ஆடிப்போய்விட்டோம்.

என் எதிரிக்கு கூட இப்படியொரு கஷ்டமும், மனஉளைச்சலும் வரக்கூடாது. இவ்வளவு துயரத்தையும் வயிற்றில் பிள்ளையை சுமந்து கொண்டு நான் அனுபவித்தேன். இப்போது அப்பெண், தனது காதலனுடன் நான் செலுத்திய பணத்தில் மகிழ்ச்சியாக இந்தோனேசியா கிளம்பி சென்றுவிட்டார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts