TamilSaaga

லாரியிலிருந்து தடுக்கி விழுந்த தமிழக தொழிலாளி… முழங்காலில் கடுமையான அறுவை சிகிச்சை…. மொத்த இழப்பீடு தொகையையும் வழங்க வேண்டும் என சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு!

சிங்கப்பூரில் கட்டுமான தொழில் உள்ளிட்ட தொழில்களை செய்யும் தொழிலாளர்களை ஓரிடத்தில் இருந்து வேலை செய்யும் இடத்திற்கு அழைத்துச் செல்வதற்கு பொதுவாக லாரிகளை பயன்படுத்துவது வழக்கம். இதற்கு சில நாட்களுக்கு முன்பு அரசு தடை விதிக்க வேண்டும் என்று கூறிய சம்பவம் தற்பொழுது விவாதமாக வருகின்றது. சிங்கப்பூரில் போக்குவரத்து செலவு அதிகம் என்பதால், முதலாளிகள் தொழிலாளர்களை குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைப்பதற்கு லாரிகள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு லாரியிலிருந்து இறங்கும்போது தொழிலாளி கீழே விழுந்ததற்காக தொடுக்கப்பட்ட வழக்கில் தற்பொழுது தொழிலாளிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. கடந்த ஜனவரி 2021 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 வயதான ராமலிங்கம் முருகன் என்பவர் கப்பல் பழுதுபார்ப்பு ஊழியராக பணிபுரிகின்றார். இவர் சிங்கப்பூரில் உள்ள “ரிகல் மெரைன் சர்வீசஸ்” என்னும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். வேலை முடித்துவிட்டு லாரியில் இருந்து இறங்கும்போது, தள்ளிவிடப்பட்டதால் கீழே விழுந்ததில் முழங்காலில் பயங்கரமான காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் அவர் விபத்தில் தனக்கு ஏற்பட்ட காயத்திற்காக இழப்பீடு கோரி நீதிமன்றத்தை அணுகினார். இந்நிலையில் தொழிலாளியின் கவனக்குறைவு தான் விபத்திற்கு காரணம் என்று முதலாளி சார்பில் இருந்து தொழிலாளி மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில் இருதரப்பு நியாயங்களையும் விசாரித்த நீதிபதி கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி தொழிலாளியின் பாதுகாப்பை கவனிக்க தவறியதற்காக இழப்பீடு வழங்க வேண்டும் என்று முதலாளிக்கு உத்தரவிட்டுள்ளது.

முருகனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பிறகு 2021 ஜனவரி 3 முதல் ஜூன் மாதம் வரை அவர் மருத்துவ விடுப்பில் இருந்தார். அதற்கான தொகையையும், இழப்பீடு தொகையும் சேர்ந்து முதலாளி வழங்க வேண்டும் என்று தற்பொழுது நீதிமன்றம் தொழிலாளிக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. மேலும் தொழிலாளி மீது தவறு இருப்பது என்றால் மற்ற ஊழியர்களிடமிருந்து முறையான சாட்சி நிரூபிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லை எனும் பட்சத்தில் தொழிலாளிக்கு தேவையான பணத்தை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts