TamilSaaga

சிங்கப்பூரில் உயரத்தில் இருந்து விழுந்த வெளிநாட்டு ஊழியர்… சாமி புண்ணியத்தில் உயிருடன் தப்பிய அதிசயம்… நிறுவனங்களின் அலட்சியத்தால் தொடர்கதையாகிறதா பணியிட விபத்துகள்?

சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர் 10 மீட்டர் உயரத்தில் இருந்து தவறி விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சிங்கப்பூரில் பணியிட விபத்து இந்த வருடம் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் இந்திய பணியாளர் ஒருவர் மீது வெயிட் விழுந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்கம் குறைவதற்குள் இன்னொரு பணியிட விபத்தும் நடந்துள்ளது.

இதுகுறித்து சிங்கை மனிதவள அமைச்சகம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் திங்கள்கிழமை மாலை 3 மணியளவில் டாம்லின்சன் ரோடு மற்றும் ஆர்ச்சர்ட் பவுல்வர்டு சந்திப்பில் கட்டப்பட்டு வரும் பார்க் நோவா என்ற சொகுசு ஃப்ரீஹோல்ட் காண்டோமினியத்தில் வேலை நடந்து கொண்டிருந்தது. அங்கு பணியில் இருந்த 31 வயதான வங்காளதேச தொழிலாளி ஒருவர் திடீரென 10 மீட்டர் உயரத்தில் இருந்து தவறி விழுந்தார்.

தொழிலாளி கீழே விழுந்த பிறகும் இரும்புக் கம்பிகளின் குவியலில் சிக்கிக் கொண்டார். பின்னர் அவரை மத்திய தீயணைப்பு வீரர்கள் மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மீட்புக்குழுவினர் (SCDF) இணைந்து ஹைட்ராலிக் உபகரணங்களுடன் மீட்டனர்.

அதிர்ஷடவசமாக அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அவரது வலது கை மற்றும் இரு தொடைகளிலும் காயங்கள் ஏற்பட்டது. தொடர்ந்து உச்சந்தலையில் காயங்கள் ஏற்பட்டன. தற்போது அந்தத் தொழிலாளி சுயநினைவுடன் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். மேலும் அவர் தற்போது பெரிய பாதிப்பில் எதுவும் இல்லை என்றும் MOM குறிப்பிட்டுள்ளது.

அவர் செங் யூ ஸ்காஃபோல்டிங் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இந்த விபத்தால் உயரத்தில் நடந்து வரும் அனைத்து அனைத்து சாரக்கட்டு பணிகளையும் நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாக MOM கூறியிருக்கிறது. சிங்கப்பூரில் இந்த ஆண்டு நடந்த அதிக எண்ணிக்கையிலான பணியிட மரணங்கள் கட்டுமானத் துறையில் தான் நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

பணியிட விபத்துகள் அதிகரித்து வருவதை தடுக்க MOM 1 செப்டம்பர் 2022 முதல் 28 பிப்ரவரி 2023 வரையில் six-month heightened safety அமல்படுத்தி இருக்கிறது. 2022 முதல் ஒன்பது மாதங்களில் பதிவு செய்யப்பட்ட 37 பணியிட இறப்புகளில் ஏழு பேர் உயரத்தில் இருந்து விழுந்து இறந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts