TamilSaaga

“மேலும் ஒரு சாங்கி விமான நிலைய ஊழியருக்கு தொற்று” : முதற்கட்ட சோதனையில் Omicron இருப்பதாக தகவல்

சிங்கப்பூர் சாங்கி விமான நிலைய முனையம் 3ல் உள்ள “Loading” பிரிவு உதவியாளர் ஒருவர் புதிய வகை ஓமிக்ரான் மாறுபாட்டிற்கு முதற்கட்டமாக சோதனை செய்துள்ளார் என்று சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று வியாழன் (டிசம்பர் 16) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. வழக்கு எண் 276615 என அழைக்கப்படும் அந்த நபர், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு, லேசான அறிகுறிகளைக் கொண்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 42 வயதான அந்த நபர், “Loading” பிரிவில் உதவியாளராக பணிபுரியும் அவர், விமான பயணிகளுடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் இறந்த புலம்பெயர்ந்த தொழிலாளி

அவர் கடந்த டிசம்பர் 8 அன்று காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு கிளினிக்கில் மருத்துவ சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு பெருந்தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது, இறுதியில் அவரது சோதனை முடிவு அடுத்த நாள் அவருக்கு பெருந்தொற்று இருப்பதாய் உறுதிசெய்த நிலையில் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் அவரது மாதிரி நேற்று டிசம்பர் 16ம் தேதி ஓமிக்ரான் மாறுபாட்டிற்காக சோதிக்கப்பட்டது, மேலும் அவரது சோதனை முடிவு முதலில் நேர்மறையானதாக வந்தது” என்று MOH தெரிவித்துள்ளது.

ஏற்கனவே வழக்கு எண் 279330 என்று கூறப்படும் நபர், சாங்கி விமான நிலைய முனையம் 3ல் லோடிங் கேபின் உதவியாளராகப் பணிபுரியும் 54 வயதுடையவர் கடந்த புதன்கிழமை ஓமிக்ரானுக்கு முதற்கட்டமாக சோதிக்கப்பட்டார். இதனையடுத்து “தேசிய பொது சுகாதார ஆய்வகம் இந்த மாறுபாட்டை உறுதிப்படுத்த முழு மரபணு வரிசைமுறையையும் நடத்தி வருகிறது மற்றும் தொடர்புத் தடமறிதல் நடந்து வருகிறது” என்று வியாழக்கிழமை புதிய வழக்கு குறித்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான அந்த Omicron வழக்குகளின் அனைத்து நெருங்கிய தொடர்புகளும் நியமிக்கப்பட்ட இடங்களில் 10 நாள் தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள் மற்றும் அவர்களின் தனிமைப்படுத்தலின் தொடக்கத்திலும் முடிவிலும் பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (PCR) சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts