TamilSaaga

சிங்கப்பூர்.. போலி சான்றிதழால் வந்த சோதனை : வெளிநாட்டு தொழிலாளிக்கு 45 வார சிறை – நிறுவனத்திற்கு MOM வைத்த செக்

“தமிழர் உள்பட பிற வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிய சிங்கப்பூர் SNA அதிகாரிகள்” – MP ஜோஸ்பின் நடத்திய பாராட்டு விழா

என்ன நடந்தது?

சிங்கப்பூரில் 35 வயதான தொழிலாளி ஒருவர் Fork Lift இயந்திரத்தை அதிவேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதோடு அருகில் இருந்த தொழிலாளிக்கு பலத்த காயத்தையும் ஏற்படுத்தியுள்ளார் காயப்படுத்தினார். Mamun AL என்ற அந்த பங்களாதேஷியா தொழிலாளி Fork Lift இயந்திரத்தை இயக்குவதில் பயிற்சி பெறவில்லை என்பதும் அவர் போலியான Fork Lift பயிற்சி சான்றிதழை தனது பணிக்காக சமர்பித்ததும் அதன் பிறகு தான் தெரியவந்தது.

கடந்த ஜனவரி 18, 2018 அன்று விபத்து நடந்தபோது QFC கட்டுமான நிறுவனத்தால் Mamun பணியமர்த்தப்பட்டுள்ளார். அதற்கு பிறகு அந்த நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள 11 துவாஸ் அவென்யூ 10ல் உள்ள ஒரு கட்டிடத்தில் Alteration பணிகளை மேற்கொண்டு வந்தது. அப்போது அந்த நிறுவனத்தின் சார்பாக Mamun பாதுகாப்பு மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார். சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட திரு. சியா கோக் கியோங், மேற்குறிப்பிட்ட அந்த பணியிடத்திற்கு சுகாதாரப் பொருட்களுடன் ஒரு லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். அவர் வேறொரு நிறுவனத்தில் டெலிவரி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார்.

சிங்கப்பூர்.. VTL விண்ணப்பங்களின் ஒதுக்கீடு : “அதை” பொறுத்துதான் அளிக்கப்படும் – High Commissioner வெளியிட்ட முக்கிய Update

லாரியில் உள்ள பொருட்களை இறக்கும் நோக்கத்தில், Mamun தான் இயக்கிக்கொண்டிருந்த Fork Lift இயந்திரத்தின் முன்னாள் உள்ள Mast எனப்படும் இரு பாரம் தூக்கிகளை லாரியின் வலது பக்கம் நோக்கி நகர்த்தியுள்ளார். Fork Lift இயந்திரத்தை முறையாக பயன்படுத்ததால் அருகில் நின்றுகொண்டிருந்த சியா மீது பயங்கரமாக மோதி அவருடைய விலா எலும்புகள் மற்றும் இடுப்பு எலும்புகளில் பலத்த காயம் மற்றும் முறிவுகள் ஏற்பட்டது. அதன் பிறகு நடந்த விசாரணையில், Mamun Fork Lift இயக்குவதற்கான எந்தப் பயிற்சியிலும் கலந்து கொள்ளவில்லை என்பது தெரியவந்தது.

கடந்த ஜூலை 2021ல் அவருக்கு 45 வார சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவரது முதலாளிக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts