TamilSaaga

Exclusive : சிங்கப்பூரில் இருந்து கொண்டே தமிழரை ஏமாற்றிய ஏஜென்ட்… சிங்கையிலும் அதிகரிக்கும் போலி ஏஜெண்ட்டுகள்? என்னம்மா பீலா விடுறானுங்க…

சிங்கப்பூரில் வேலைக்காக காத்திருக்கும் சிலருக்கு தொடர்ந்து சில மோசடிகளும் நடந்து கொண்டு தான் இருந்து வருகிறது. இதை போல ஒரு பிரச்னையில் சிக்கிய தமிழ்நாட்டை சேர்ந்த ஊழியர் ஒருவர் வேலைக்காக $400 சிங்கப்பூர் டாலர் கொடுத்து ஏமாந்து இருக்கிறார்.

சிங்கப்பூரில் வேலை செய்து சம்பாரித்தால் ஊரில் கடனை அடைத்து விடலாம் என்ற நினைப்பில் தான் பலரும் விமானம் ஏறுகின்றனர். ஆனால் அதனை அடைய அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் சொல்லிமாளாது. ஒவ்வொருவரையும் சந்தேகப்பட வேண்டும் என்பது சிங்கப்பூர் ஊழியர்களின் வாழ்க்கைக்கு பொருந்தும்.

இன்ஸ்ட்யூட் மற்றும் ஏஜென்ட்டினை சந்தேகப்பட்டு கேள்வி எழுப்பிக்கொண்டே இருங்கள் என பலரும் கூறி கேட்டிருப்போம். தமிழ்நாட்டில் தான் சிலர் ஏஜென்ட் ஏமாற்றுவார்கள் என்ற எண்ணம் இருந்தது. இந்த பழக்கம் தற்போது சிங்கப்பூர் ஏஜென்ட் சிலருக்கும் தொற்றி இருக்கிறது போல.

சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தவர் சதீஷ். தற்போது தமிழ்நாட்டில் இருப்பவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்களை சேர்த்து விடும் பணி செய்து வந்திருக்கிறார். அந்த சூழலில் அவருக்கு ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. தன்னுடைய பெயரை தினேஷ் என அறிமுகம் செய்துக் கொண்ட அந்த நபர் தான் ஒரு சிங்கப்பூர் ஏஜென்ட் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

தொடர்ந்து, தன்னுடைய வாட்ஸ் அப்பிற்கு S-Pass மற்றும் E-Passக்கு ஆட்களை சதீஷிடம் ஏற்பாடு செய்து தரும்படி கேட்க இவரும் தனக்கு தெரிந்தவர்களிடம் பேசி minimart வேலைக்கு ஒருவரை refer செய்து இருக்கிறார். சில நாட்கள் சென்றவுடன், 2 டாக்குமெண்ட்ஸ் சமர்பித்து விட்டேன். இன்னும் சில டாக்குமெண்ட்களுக்காக நீங்கள் பணம் கட்ட வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

வேலை நிமித்தம் என்பதால் அவர் மீது சந்தேகப்படாமல் சதீஷ் தன்னுடைய நண்பரிடம் கூறி $400 சிங்கப்பூர் டாலரை அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால் எப்போதும் போல காசு வாங்கி சில நாட்கள் காரணம் சொன்ன தினேஷ் பிறகே இவர் நம்பரினை ப்ளாக் செய்து விட்டு தப்பித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசி இருந்த சதீஷ், இதைப்போன்ற மோசடிகளில் நான் தெரியாமல் சிக்கிவிட்டேன். அவர்கள் கொடுத்த அமுதா எனப் பெயரிட்டுள்ள வங்கி கணக்கினை வைத்து யாரையும் கண்டுப்பிடிக்க முடியுமா எனத் தெரியவில்லை. என்னைப் போன்ற சிங்கப்பூர் நண்பர்களோ, இங்கு வேலைக்கு வர ஆசைப்படும் யாரும் மாட்டிக்கொள்ள வேண்டாம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து நாமும் விபரமறிந்தவர்களிடம் விசாரித்தோம். இது ஒரு சைபர் மோசடி என்பதால் அவ்வளவு எளிதில் குற்றவாளிகளை பிடிக்க முடியாது என்றே கூறப்படுகிறது. சிங்கப்பூர் ஏஜெண்ட்டோ, இந்திய ஏஜெண்ட்டோ யாரையும் முன்பின் தெரியாமல் நம்பாதீர்கள். ஒருவரை குறித்து தீர விசாரித்து விட்டு இதைப் போன்ற மிகப்பெரிய செயல்களில் இறங்குவதே சிறந்தது. உஷார்!

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts