TamilSaaga

சிங்கையின் பலமே இதுதான்.. உண்மையில் ரஷ்யாவிற்கு சிங்கப்பூர் வைத்த “செக்” – மாஸ்டர் ஸ்ட்ரோக்!

இந்த வருடம் எப்படியும் இந்த கொடிய நோயின் தாக்கம் உலக அளவில் குறையும் என்று நம்பப்படுகிறது, ஆனால் இப்பொது இன்னும் அதுவே முழுமையாக ஓயாத நிலையில் தான் வந்திறங்கியுள்ளது ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே நடக்கும் போர். அனுதினமும் ராணுவத்தினரும் சில பொதுமக்களுக்கும் இந்த போரில் மாண்டு வருகின்றனர். போரை நிறுத்தச்சொலி உலகின் பல நாடுகளும் ரஷ்யாவை எச்சரித்து வரும் வேளையில் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையையும் விதித்து வருகின்றது.

மிக மோசமான விபத்து.. படுத்தப்படுக்கையான வெளிநாட்டு ஊழியர்.. 4 கைக்குழந்தைகளுடன் தத்தளிக்கும் தாய்!

உலக அளவில் புகழ்பெற்ற பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் சேவைகளை ரஷ்யாவில் முடக்கி, தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். ஆனால் ரஷ்யா இதற்கு கவலைப்பட்டது போல தெரியவில்லை என்று தான் கூறவேண்டும். ஏற்கனவே 2014ம் ஆண்டு இதேபோன்று உக்ரைனின் கிரிமீய தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியபோது அமெரிக்கா அப்போதே பொருளாதார தடையை ரஷ்யா மீது விதித்தது. ஆனால் அதிலிருந்து மீண்டு வர ரஷ்யா பயன்படுத்திய ஒரு மாற்று வழிதான் Digital Currency, இது நிச்சயம் ரஷ்யாவின் ஒரு மாஸ்டர் பிளான் என்றே கூறலாம்.

இன்றளவும் ரஷ்யா வெளிநாட்டு நிதிகளை Digital Currency மூலமாகவே பெரிய அளவில் பயன்படுத்தி வருகின்றது. இப்போது பிற நாடுகள் விதிக்கும் பொருளாதார தடையை எண்ணி ரஷ்யா பெரிதும் கவலைகொள்ளாததற்கு இதுவும் ஒரு காரணம் என்றே கூறலாம்.

சிங்கப்பூர் வைத்த செக்..

ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்துள்ள நாடுகளின் பட்டியலில் நமது சிங்கப்பூரும் உண்டு, சில தினங்களுக்கு முன்பு “நட்பற்ற நாடுகளில்” பட்டியலை ரஷ்யா வெளியிட்டபோது அதில் சிங்கப்பூரும் இருந்தது குறிப்பிடத்தக்கது. சரி உண்மையில் ரஷ்யாவுக்கு நம்ம சிங்கப்பூர் வைத்த உண்மையான செக் என்ன? என்றால் அது டிஜிட்டல் பரிவர்த்தனை தான்.

ரஷ்யாவிற்கான சிங்கப்பூரின் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் ஒருபுறம் இருக்க கூடுதலாக, சிங்கப்பூர், ரஷ்யா மீது நிதிக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்முலம் அவை தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்ய வங்கிகள், நிறுவனங்கள், செயல்பாடுகள் மற்றும் ரஷ்ய அரசாங்கத்திற்கு பயனளிக்கும் நிதி திரட்டும் செயல்பாடுகளை தொடர்ந்து முடக்கி வருகின்றது. இதில் Highlight டிஜிட்டல் பேமெண்ட் டோக்கன் சேவை வழங்குநர்கள், கிரிப்டோகரன்சிகள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளும், NFTகள் போன்ற டிஜிட்டல் சொத்துகளும் இந்த முடக்கத்தில் அடங்கும் என்பது தான்.

சிங்கப்பூரில் விமானப் பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க S$500 மில்லியன் – புதிய வேலைவாய்ப்புகளுக்கு இது வழிவகுக்குமா?

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பெரிதும் பயன்படுத்தும் ரஷ்யாவிற்கு சிங்கப்பூரின் இந்த நெருக்கடி உண்மையில் ஒரு பெரிய சிக்கல் என்றே கூறலாம். ஆனால் ரஷ்யா இதற்கு அசைந்து கொடுக்குமா? போரில் மாற்றங்கள் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts