TamilSaaga

சிங்கப்பூர் தேசிய தின அணிவகுப்பில்.. கண்ணிமைக்கும் நேரத்தில் விழுந்த பாராசூட் வீரர் – சீக்கிரம் உயிருடன் மீண்டு வாங்க சார்!

சிங்கப்பூரின் 57வது தேசிய தினம் நேற்று (ஆக.9) மிகச் சிறப்பாக நடந்து நிறைவுற்றது. பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக முடங்கியிருந்த சூழலில், இம்முறை அதிக உற்சாகத்துடன் கோலாகலமாக தேசிய தினம் கொண்டாடப்பட்டது.

ஆனால், நேற்று மகிழ்ச்சி மிதந்து கொண்டிருந்த நேரத்தில் நடந்த விபத்து ஒன்று, ஒட்டுமொத்த விழாவுக்கே திருஷ்டியாக அமைந்துவிட்டது.

தேசிய தின அணிவகுப்பில் நடந்த பாராசூட் சாகச நிகழ்ச்சியின் போது, Red Lions parachut வீரர் Jeffrey Heng லாவகமாக தரையிறங்கிக் கொண்டிருந்தார். தரையைத் தொட இன்னும் சில மணி நொடிகளே இருந்த நிலையில், திடீரென அவரால் Stable-ஆக தரையிறங்க முடியாமல் தடுமாறினார்.

மேலும் படிக்க – சிங்கப்பூர் தேசிய கீதம்.. தாரை தாரையாக கொட்டிய கண்ணீர் – ஒரு புகைப்படத்தால் ஒரே இரவில் சிங்கையில் பிரபலமான நபர்.. சிலாகித்த துணைப் பிரதமர்!

ஒருக்கட்டத்தில் அவரால் திட்டமிட்டபடி இறங்க முடியவில்லை. பாராசூட்டின் இயக்கத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், மேலிருந்து பறந்து வந்த வேகத்திலேயே தரையில் விழுந்தார். உடனடியாக அங்கிருந்த மருத்துவக் குழு விரைந்து வந்து அவரை பரிசோதித்தது. நினைவின்றி இருந்த parachut வீரர் Jeffrey Heng உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில், அந்த வீரரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக சிங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், “3WO (மூன்றாவது வாரண்ட் அதிகாரி) ஜெஃப்ரி ஹெங்கின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவருக்கு சுயநினைவுடன் இருக்கிறார். தொடர்ந்து அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜெஃப்ரி விரைவில் குணமடைய அனைவரும் வாழ்த்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரி Jeffrey Heng ஒரு சாதாரண கத்துக்குட்டி அல்ல. இதுவரை, வெற்றிகரமாக 1,100 முறை பாராசூட் லேண்டிங் செய்திருக்கிறார். ஆனால், எதிர்பாராதவிதமாக காற்று மிக அதிகமாக வீசியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிங்கப்பூர் மட்டுமல்ல.. எந்தவொரு நாடாக இருந்தாலும் அங்கே ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரின் அர்ப்பணிப்பு என்பது விலைமதிப்பற்றது. சம்பளத்துக்காகவோ, அரசு செய்து கொடுக்கும் வசதிக்காகவோ, பெருமைக்காவோ என்று எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்… ஒருவர் ராணுவத்தில் எந்த காரணத்துக்கு வேண்டுமானாலும் வேலைக்கு சேர்ந்தாலும், அவர் போற்றுதலுக்கு உரியவரே. ஏனெனில், இதில் மட்டும் தான் உயிரை பணயம் வைத்து சம்பளம் வாங்குகிறார்கள்.

சீக்கிரம் மீண்டு வாருங்கள் Jeffrey Heng!

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts