TamilSaaga

“இனி எல்லாம் மின்சார மயம்” – 2026க்குள் மின்சார வாகனங்களை களமிறக்க முடிவு – சிங்கப்பூர் போஸ்ட்

சிங்கப்பூரில், தீவு மாசுபடுவதை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இனி சிங்கப்பூர் – தபால்காரர் விரைவில் உங்கள் அஞ்சலை மின்சார வாகனங்களில் கொண்டு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று திங்களன்று (ஆகஸ்ட் 16) சிங்கப்பூர் போஸ்ட் வெளியிட்ட அறிக்கையில், தனது அனைத்து இலகுவான வாகனங்களையும் 2026க்குள் மின்சார வாகனங்களாக மாற்றவிருப்பதாக அறிவித்தது. தொடக்கத்தில், அது இரண்டு மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் இரண்டு வேன்களின் முயற்சியை தற்போது தொடங்கியுள்ளது.

உள் எரிப்பு இயந்திரங்களில் இயங்கும் அந்த நிறுவனத்தின் 700 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை மாற்றுவதற்கு அயோனா RAP மூன்று சக்கர வண்டி பரிசீலிக்கப்படுகிறது. இந்த BYD T3 மின்சார வேன்கள், வெற்றிகரமாக இருந்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவர்களின் சான்றிதழ் காலாவதியாகும் என்பதால், சிங்போஸ்டின் 140 பெட்ரோல் வேன்களையும் படிப்படியாக நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 2030ம் ஆண்டுக்குள் முழுமையான கிறீன் ஹவுஸ் வாயு வெளியேற்றத்தை 35 சதவிகிதம் குறைப்பதே சிங்க் போஸ்டின் இலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts