TamilSaaga

சிங்கப்பூரில் தொற்று பாதித்த ஊழியருக்கான விடுப்பை மறுக்கும் முதலாளிகளுக்கு கடும் தண்டனை – MOM-ன் Breaking அறிவிப்பு!

சிங்கப்பூரில் பெருந்தொற்றுக்கு நேர்மறையாக (Positive) சோதனை செய்த ஊழியர்களிடம் மருத்துவச் சான்றிதழை (MC) கேட்பது அல்லது அவர்களை ஊதியமில்லா விடுப்பில் செல்ல வலியுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், குறிப்பிட்ட அந்த முதலாளிகளின் பணி அனுமதிச் சலுகைகள் ரத்து செய்யப்படும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார். ஏற்கனவே அமலில் உள்ள முத்தரப்பு ஆலோசனையின் கீழ், குறிப்பிட்ட அந்த தொழிலாளருக்கு வீட்டிலிருந்து வேலை செய்வது சாத்தியமில்லை என்ற பட்சத்தில், MC இல்லாமல் நடைமுறையில் உள்ள சுகாதார நெறிமுறைகளின் கீழ் தேவைப்படும் காலங்கள் அவருக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

கூட்டம் நிறைந்த சிங்கப்பூர் சாலை.. காட்டுப்பன்றி தாக்கியதில் 15 நிமிடம் ரோட்டில் கிடந்த பெண் – தொடர்ந்து நடந்த அட்டகாசம்!

மேற்குறிப்பிட்ட இந்த செயல்பாட்டில் எந்தவொரு முதலாளியும் உரிய காரணமின்றி MOM-யின் விதிகளை மீறினால், சம்மந்தப்பட்ட ஊழியர்கள் MOMஐ (மனிதவள அமைச்சகம்) நிச்சயம் அணுகி புகார் அளிக்கலாம் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கடந்த புதன்கிழமை (ஜனவரி 9) பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். ஊழியர்கள் புகார் அளிக்கும்போது உடனடியாக MOM அதில் தலையிட்டு, முதலாளிகளுடன் இணைந்து உண்மைகளை சரிபார்த்து, ஆலோசனையைப் பின்பற்றும்படி அவர்களுக்கு அறிவுறுத்தும்” என்றும் அமைச்சர் கூறினார்.

ஆனால், இதுவரை, அமைச்சகம் எந்த ஒரு முதலாளியையும் அதுபோன்ற பிரச்சனைக்காக சந்திக்கவில்லை என்றும், அப்படி சந்திக்கும் பட்சத்தில் முதலாளிகளின் மீது தவறு இருந்தால் நிச்சயம் அவர்களின் பணி அனுமதிச் சலுகைகள் ரத்து செய்யப்படும் என்றும் கூறினார். தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு ஆகிய முத்தரப்பு கூட்டாளிகள் வழங்கிய ஆலோசனைக்கு இணங்கத் தவறிய முதலாளிகளுக்கு அபராதம் விதிக்கப்படுமா என்று கேட்ட திரு லூயிஸ் எங்-க்கு அமைச்சர் இந்த பதிலை அளித்தார்.

சிங்கையின் பலமே இதுதான்.. உண்மையில் ரஷ்யாவிற்கு சிங்கப்பூர் வைத்த “செக்” – மாஸ்டர் ஸ்ட்ரோக்!

கடந்த பிப்ரவரி 24 அன்று புதுப்பிக்கப்பட்ட ஆலோசனையின்படி, உடல் நலத்துடன் இருக்கும் பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய முடிந்தால் அவர்களை நிச்சயம் அனுமதிக்க வேண்டும் என்பதாகும். அதேபோல வீட்டிலிருந்து வேலை செய்வது சாத்தியமில்லை என்றால், தொழிலாளர்கள் பணியில் இல்லாத காலத்தை, அவர்கள் வீட்டில் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளும் காலத்தை, MC இல்லாமல் ஊதியத்துடன் கூடிய நோய்வாய்ப்பட்ட விடுப்பாக முதலாளிகள் கருத வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts