TamilSaaga

“சிங்கப்பூர், இந்தியா VTL பயணம்” : Service மற்றும் Manufacturing Sectorக்கு மட்டும் அனுமதி அளிப்பது ஏன்? – Exclusive Report

சிங்கப்பூர் அரசு Omicron காரணமாக கடந்த ஒரு மாத காலமாக புதிய VTL விண்ணப்பங்களை அளிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது அந்த விண்ணப்பங்களை அளிக்க தொடங்கியுள்ளது. இருப்பினும் முன்பு இருந்ததை விட 50% குறைவான அளவிலான VTL விண்ணப்பங்களை மட்டுமே தற்போது அளித்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வரும் பணியாளர்களில் சில துறைகளை சார்ந்தவர்கள் மட்டுமே சிங்கப்பூர் வர அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட E-Passport : எப்படி பெறுவது? எவ்வாறு உதவும்? – இதனால் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்மை உண்டா?

குறிப்பாக Construction மற்றும் Marine ஆகிய இரண்டு துறையை சேர்ந்தவர்கள் VTL மூலம் தற்காலிகமாக சிங்கப்பூர் வர முடியாது. ஆனால் Service மற்றும் Manufacturing ஆகிய செக்டாரை சேர்ந்த மக்கள் தொழிலாளர்கள் தடையின்றி VTL apply செய்து அதன் மூலம் சிங்கப்பூர் வரலாம். ஆனால் இந்த இரண்டு துறைகளுக்கு மட்டும் ஏன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று பலரும் கேள்விகளை முன்வைக்கின்றனர். ஆகியால் இதுகுறித்து பல ஆண்டுகளாக இந்த துறையில் அனுபவம் உள்ள தயாளன் என்ற ஏர் ட்ராவல்ஸ் உரிமையாளரிடம் நமது தமிழ் சாகா சிங்கப்பூர் பேசியபோது அவர் சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

அந்த தகவல்கள் பின்வருமாறு..

“Service sector என்பது சிங்கப்பூரின் முதுகெலும்பாக பார்க்கப்படுகிறது” என்று சட்டென்று சொன்ன தயாளன் அவர்கள். சிங்கப்பூர் சீராக இயங்க பல காரணங்கள் உள்ள நிலையில் அதில் Service Sectorம் ஒன்று என்றார். Doctors, Teachers, முன்களப்பணியாளர்கள் என்று பலர் இந்த Service Sectorல் தான் வருகின்றனர், ஏன் உலக சுகாதார அமைச்சகம் கூட Service Sectorல் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறியுள்ளது என்ற ஆணித்தரமான கருத்தை தயாளன் முன்வைத்தார்.

“பரபரப்பான சிங்கப்பூர் Loyang Drive பகுதி” : திடீரென்று ஏற்பட்ட ரசாயன கசிவு – என்ன நடந்தது?

Manufacturing sectorஐ பொறுத்தவரை அனைத்து தொழிலாளர்களும் இந்த வகையின் கீழ் வருவதில்லை, அந்த துறையில் அதிக அளவிலான பொறுப்பில் இருப்பவர்கள் மட்டுமே இந்த வகை sector கீழ் வருகின்றனர். சுருங்க சொன்னால் Production துறையில் இருப்பவர்கள் மட்டுமே இந்த Manufacturing Sector கீழ் வருவார்கள். சிங்கப்பூரின் உற்பத்தியில் இவர்கள் அதிக பங்கு வகிப்பதால் அவர்களுக்கு VTL சேவை வழங்கப்படுகிறது என்றார் அவர்.

ஆனால் இந்த தொற்று முடிந்த பிறகு நிச்சயம் தொற்றுக்கு முந்தய காலம்போல எல்லா வகையான பணியாளர்களும் சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

News Source

நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts