TamilSaaga

BIG BREAKING: சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழர்களுக்கு சூப்பர் செய்தி… இனி ஜஸ்ட் 1 நிமிடம் போதும் – சிங்கை DBS வங்கிக்கு நன்றியோ நன்றி!

சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் சீனர்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் சாட்சாத் இந்தியர்களே. அதிலும், தமிழர்கள் தான் அதிகம். இதில், பெரும் பெரும்பாலானோர் பணி நிமித்தம் சிங்கப்பூரில் வசிப்பவர்களே.

மாதாமாதம் கிடைக்கும் சம்பளத்தில் குறிப்பிட்ட பணத்தை மட்டும் தங்கள் செலவுக்கு வைத்துக் கொண்டு, மிச்சத்தை 3 தேதிக்குள் அனுப்பியாக வேண்டிய கட்டாயத்தில் தான் பல ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். வட்டிப் பணம், கடனுக்கு வாங்கிய தொகை, ஹவுஸிங் லோன் என்று வாங்கிய கடனுக்காக அவசர அவசரமாக பணத்தை சிங்கப்பூரில் இருந்து அனுப்ப வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில், தற்போது சிங்கப்பூரில் இருந்து மிக மிக குறைவான நேரத்தில்.. அதாவது 30 நொடிகளில் பணத்தை இந்தியாவில் எந்த மூளைக்கும் அனுப்பும் வசதி விரைவில் ஏற்படுத்தப்படுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவில் State Bank Of India, ICICI வங்கி உட்பட 5 உள்ளூர் வங்கிகள் தற்போது சிங்கப்பூர் DBS வங்கியுடன் இணைந்து Real Time Remittance System சேவை இந்தியாவின் UPI தளத்தின் வாயிலாக அளிக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Exclusive : சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊர் செல்லும் பயணிகளே.. நீங்கள் TV வாங்கிச்செல்வது லாபமா? நஷ்டமா?

இந்த கூட்டணி மூலம் நமது சிங்கப்பூர் paynow சேவையுடன் UPI தளத்தை இணைத்து இரு நாடுகள் மத்தியிலான Payment-ஐ சில நிமிடங்களில் செய்யும் வாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது. இதனால் தற்போது 24 மணிநேரத்திற்கு அதிகமாக எடுக்கும் பேமெண்ட் சில நொடிகளில் மேற்கொள்ள முடியும்.

UPI தளத்தை நிர்வாகம் செய்யும் NPCI அமைப்பின் கிளை நிறுவனமான NPCI International Payments Ltd இரு நாடுகள் மத்தியிலான பேமெண்ட்-ஐ சாத்தியப்படுத்த Monetary Authority of Singapore உடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இந்தச் சேவையின் சோதனை திட்டத்தை டிசம்பர் மாதத்திற்குள் செயல்படுத்தத் திட்டமிட்டு உள்ளது.

இந்தச் சேவை செயல்பாட்டுக்கு வந்தால் இந்தியா – சிங்கப்பூர் மத்தியிலான Money Transformation மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும். பணப்பரிவர்த்தனையும் வேகமாக நடக்கும். அனைத்தையும் தாண்டி இந்த ரியல் டைம் பேமெண்ட் சேவை தனிநபர், நிறுவனங்கள், கடைகள் என அனைத்து தரப்பினருக்கும் அளிக்கப்பட உள்ளது. இந்த முயற்சி ஒர்க் அவுட் ஆனால், மலேசியாவிலும் இது விரிவாக்கம் செய்யயப்பட உள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts