TamilSaaga

நாடுவிட்டு நாடு கடந்து இணையத்தில் காதல் மோசடி… திடுக்கிடும் தகவல்கள்

சிங்கப்பூர் மற்றும் மலேசிய காவல்துறை இணைந்து இணையத்தில் காதல் மோசடி செய்து பணம் பறிக்கும் கும்பலை சுற்றி வளைத்துள்ளது. அந்த கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பதிவு செய்த புகார் அடிப்படையில் காவல்துறை ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த பெண்ணிடம் கடந்த ஓராண்டாக இணையத்தின் வாயிலாக தொடர்பில் இருந்த நபர் ஒரு பார்சலை கொரியர் மூலம் அனுப்பியுள்ளார்.

அதில் அந்த இணைய காதலன் ஒரு கைப்பை,காலணி மற்றும் பல பொருட்களை அனுப்பியுள்ளார். அதற்கு டெலிவரி கட்டணமாக S$1000 செலுத்துமாறு மலேசிய டெலிவரி நிறுவனத்தில் இருந்து தொலைப்பேசி மூலம் கேட்கப்பட்டுள்ளது.

பணம் செலுத்திய பிறகு டெலிவரி செய்த நபர் பணத்தை பெறவில்லை எனக்கூறி மீண்டும் பணம் செலுத்துமாறு அழைப்பு வந்துள்ளது. இப்படி பாதிக்கப்பட்ட பெண் அந்த கொரியர் நிறுவனம் பற்றி தகவல்கள் கேட்கும் போது தரமறுக்கப்பட்டு உள்ளது.

இதில் எதோ தவறாக உள்ளது என உணர்ந்த அந்த பெண் காவல் நிலையித்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் மீது ஆய்வு நடத்தும் பொருட்டு கோலாலம்பூரில் இரண்டு பகுதிகளில் Commercial Affairs Department (CAD) of the SPF மற்றும் Commercial Crime Investigation Department (CCID) of the Royal Malaysia Police (RMP) நடத்திய தேடுதலில்
நைஜீரியாவை சேர்ந்த 6 நபர்களும் மலேசியாவை சேர்ந்த 1 பெண்ணும் இந்த இணைய காதல் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த கும்பலிடம் இருந்து 8 மடிக்கணினிகள், 17 கைப்பேசி, தலா 2 ஏ.டி.எம் அட்டைகள், இண்டர்னெட் ரவுட்டர்கள், பாஸ்போர்ட்டுகள் ஆகியன உள்ளிட்ட பல பொருட்கள் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிங்கப்பூரில் 34 வயது ஆணும் அவருடன் தொடர்பில் இருந்த 57 வயது பெண்ணையும் போலிசார் கைது செய்துள்ளனர்.

மலேசியாவை தளமாக வைத்து நடைபெறும் இது போன்ற மோசடியில் சிண்டிக்கேட் பொறுப்பெற்க கருதப்படுகிறது. இதுவரை சிங்கப்பூரில் சுமார் 5 வழக்குகள் உள்ளன. அவை ஏறக்குறைய S$64,000 வரை இழந்திருப்பதாகவும் மலேசியாவில் 8 வழக்குகளில் சுமார் RM 3.7 மில்லியன் அளவு மோசடி நடந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts