TamilSaaga

இந்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட E-Passport : எப்படி பெறுவது? எவ்வாறு உதவும்? – இதனால் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்மை உண்டா?

அண்டை நாடான இந்தியாவில் 2022-23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், அந்நாட்டின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குடிமக்களின் வசதிக்காக தனது பட்ஜெட் உரையில் இ-பாஸ்போர்ட்களை வழங்குவதாக அறிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் உள்ள நிலவரப்படி இந்திய குடிமக்களுக்கு பிற நாடுகளைப்போல பாஸ்போர்ட் என்பது அச்சிடப்பட்ட கையேடுகளில் கிடைக்கிறது. ஆனால் முன்னதாக, இந்திய குடிமக்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பு அம்சத்தை வழங்கும் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்கள் வழங்குவது குறித்து இந்திய அரசு விவாதித்தது.

Breaking : “திருச்சி – சிங்கப்பூர்” : Air India Expressஐ தொடர்ந்து 6 விமானங்களை ரத்து செய்யும் Indigo – காரணம் என்ன?

சரி E-Passport என்றால் என்ன?, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அது எந்த வகையில் உதவும் என்பதை தற்போது பார்க்கலாம்.

E-Passport என்றால் என்ன?

இ-பாஸ்போர்ட் என்பது ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பாஸ்போர்ட்டின் டிஜிட்டல் வடிவமாகும், இது உலகளவில் குடியேற்ற பதவிகளை சுமூகமாக கடந்து செல்ல உருவாக்கப்பட்டது. அச்சிடப்பட்ட கையேடு உருவத்தில் இருக்கும் அதே விஷயங்கள் தான் இந்த சிப்-பொருத்தப்பட்ட பாஸ்போர்ட்டிலும் இருக்கும்.
பொருத்தப்பட்டுள்ள சிப்களில் பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் பெயர், பிறந்த தேதி மற்றும் தேவையான பிற விவரங்கள் போன்ற தகவல்கள் இருக்கும்.

E-Passport எப்படி வேலை செய்கிறது?

ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களில் உள்ளதுபோல சிறிய மின்னணு சிப்பைக் கொண்ட வழக்கமான ஒரு பாஸ்போர்ட் போலத்தான் இது செயல்படும். இது பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் பெயர், முகவரி மற்றும் பிற விவரங்கள் போன்ற தகவல்களைச் சேமிக்கிறது. குடிவரவு பகுதியை ஒரு பயணி கடக்கும்போது அவருடைய நேரத்தையும் ஆவண சரிபார்ப்பிலும் E-Passportகள் உதவியாக இருக்கும். சிப் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. பாஸ்போர்ட் தகவல்களை மோசடிக்காரர்களிடம் இருந்து பாதுகாக்க இது அதிக அளவில் உதவுகிறது.

கூடுதலாக இந்த மைக்ரோசிப் பயோமெட்ரிக் தகவல்களைச் சேமிக்கிறது, இதனால் பயணிகளை எளிதாக அடையாளம் காண உதவுகிறது.

E-Passportக்கு எப்படி விண்ணப்பிப்பது?

அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இ-பாஸ்போர்ட் என்பது அச்சிடப்பட்ட கையேடுகளைப் போன்றது தான். இ-பாஸ்போர்ட் பெற விண்ணப்பதாரர்களும் அதே ஆன்லைன் நடைமுறையை பின்பற்ற வேண்டும். அனைத்து செயல்முறைகள் முடிந்ததும், விண்ணப்பதாரர்கள் இ-பாஸ்போர்ட்களைப் பெறுவார்கள். அதே போல இந்த புதிய பாஸ்ப்போர்ட்கள் வரும் வரை பயணிகள் தங்கள் பழைய பாஸ்ப்போர்ட்டை பயன்படுத்தலாம்.

“சிங்கப்பூரில் 6,62,520 வெள்ளி வரி ஏய்ப்பு” : ஒரு பெண் உள்பட 7 பேர் கைது – Sketch போட்டு தூக்கிய சிங்கப்பூர் Customs

இது எந்த விதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு உதவும்?

இன்றைய காலகட்டத்தில் (பெருந்தொற்று) பல வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்காக பிற நாடுகளுக்கு செல்லும்போது சில உரிய ஆவணங்கள் இல்லாமல் சிரமப்படுவுவதை இந்த E-Passportகள் மூலம் தவிர்க்க முடியும். சிப் பொருத்தப்பட்ட பாஸ்போர்ட்கள் Immigration போன்ற பகுதிகளில் மிகுந்த உதவியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts