TamilSaaga

Big Breaking : அனைத்து தடைகளும் நீங்கியது – தடுப்பூசி போட்ட எல்லா இந்திய பயணிகளும் தனிமைப்படுத்தலின்றி சிங்கப்பூர் வரலாம்

இனி முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் மற்றும் 12 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகள் மார்ச் 31 அன்று இரவு 11.59 மணி முதல் சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு முன் அவர்கள் எடுக்கவேண்டிய “Pre Departure Test மட்டும் எடுத்தாலே இனி சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்” ஆகவே இனி Entry Approval பெறவேண்டிய அவசியம் இருக்காது (தனிமைப்படுத்துதலும் இல்லை). சிங்கப்பூர் அதன் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான மிக முக்கியமான நடவடிக்கையில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இந்திய உள்பட பிற நாட்டு பயணிகள் இனி எந்தவித கவலையும் இல்லாமலும், VTL போன்ற குறிப்பிட்ட விமானங்களை மட்டுமே நம்பியிராமல் சிங்கப்பூர் வர முடியும்.

இன்று (மார்ச் 24) சிங்கப்பூரின் பெருந்தொற்று நிலை குறித்து பேசிய நமது பிரதமர் லீ இந்த தளர்வுகள் குறித்து அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறிய தகவல்கள் பின்வருமாறு..

Exclusive : “என் மகனை இன்னும் தொட்டுகூட பார்க்கல.. குற்ற உணர்ச்சி என்னை குத்துது” – சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழக தொழிலாளியின் வேதனை!

மேலும் சிங்கப்பூர் வந்திறங்கிய 24 மணி நேரத்திற்குள் ART சோதனை எடுக்க வேண்டியதில்லை. மேலும் தினசரி சிங்கப்பூர் வருபவர்களின் எண்ணிக்கையில் எந்தவித Quotaகளும் இருக்காது என்றும், Entry Approval இனி அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளது சிங்கப்பூர் அரசு. இந்த புதிய எல்லைக் கொள்கைகள் ஏறக்குறைய தொற்றுநோய்க்கு முன் இருந்த பயண அனுபவத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. Vaccinated Travel Frame Work என்று அழைக்கப்படும் இந்த புதிய விதி VTL சேவைக்கு மாற்றாக அமையும்.

எவ்வாறாயினும், புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் நடத்தப்படும் புறப்படுவதற்கு முந்தைய சோதனை அமலில் இருக்கும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) இன்று வியாழக்கிழமை (மார்ச் 24)வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. “உள்ளூர் மற்றும் உலகளாவிய கோவிட்-19 சூழ்நிலைகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், மேலும் வரும் வாரங்களில் புறப்படுவதற்கு முந்தைய சோதனைத் தேவையை நீக்குவது குறித்து பரிசீலிப்போம்” என்று MOH தெரிவித்துள்ளது.

முழுமையாக தடுப்பூசி போடாத நீண்ட கால அனுமதி பெற்றவர்கள் (Long Term Pass Holders) மற்றும் 13 வயது மற்றும் குறுகிய கால பார்வையாளர்கள் (Short Term Pass Holders) சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் தடுப்பூசிகளுக்கு மருத்துவ ரீதியாக தகுதியற்ற நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள், 13 முதல் 17 வயதுடைய நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் மற்றும் குறுகிய கால பார்வையாளர்கள் மற்ற செல்லுபடியாகும் நுழைவு அனுமதி வைத்திருப்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

சிங்கப்பூரில் கத்தியை வைத்து பூச்சாண்டி காட்டிய நபர்.. கெஞ்சியும், மிரட்டியும் கேட்காமல் “அழிச்சாட்டியம்” – வேறுவழியின்றி போலீசார் சுட இப்போது கல்லறையில்!

இந்த பார்வையாளர்கள் சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்குள் புறப்படுவதற்கு முந்தைய சோதனையை மேற்கொள்ள வேண்டும், ஏழு நாட்கள் தங்கியிருக்கும் அறிவிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். மேலும் அவர்களின் SHN காலத்தின் முடிவில் பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (ART) சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts