அண்டை நாடான இந்தியாவின் பல பகுதிகளுக்கு தற்போது வந்தே பாரத் திட்டத்தின் மூலம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சிங்கப்பூரில் இருந்து அனுதினம் சென்று வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை Air bubble மற்றும் வந்தே பாரத் சேவைகளை தவிர பிற பன்னாட்டு விமான சேவைகளுக்கு தற்காலிகமாக கடந்த 16 மாதங்களுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிங்கப்பூர் முதல் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு ஆகஸ்ட் மாதம் இருமார்கமாக செல்லவிருக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவை குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றது. இதனையடுத்து சிங்கப்பூரில் இருந்து இந்தியாவின் விஜயவாடா மற்றும் ஹைதெராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
அடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி சிங்கப்பூரில் இருந்து விஜயவாடாவுக்கு சிங்கப்பூர் நேரப்படி மாலை 3.10 மணியளவில் ஒரு விமானம் புறப்படவுள்ளது. அந்த விமானம் மாலை 4.55 மணியளவில் விஜயவாடா சென்றடையும்.
அதேபோல ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி சிங்கப்பூரில் இருந்து ஹைதராபாத்துக்கு சிங்கப்பூர் நேரப்படி மாலை 3.10 மணியளவில் ஒரு விமானம் புறப்படவுள்ளது. அந்த விமானம் மாலை 6.40 மணியளவில் ஹைதராபாத் சென்றடையும்.