TamilSaaga

‘சிங்கப்பூரில் திரும்பப்பெறப்படும் தளர்வு’ – உணவகங்களில் இருவர் மட்டுமே அமர்ந்து உணவு உண்ண அனுமதி?

சிங்கப்பூரில் தற்போது மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உணவகங்களில் ஐவர் அமர்ந்து உணவு உண்ணும் அனுமதி திரும்ப பெறப்படுகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதபட்சத்தில் உணவகங்களில் இருவர் மட்டுமே ஒன்றாக அமர்ந்து உணவு உன்ன முடியும்.

அதே சமயம் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டபட்சத்தில் ஐந்து பேர் குழுவாக அமர்ந்து உண்ணலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. குறுகிய இடங்களில் மாஸ்க் இல்லாமல் நடக்கும் ஒன்றுகூடல்களால் தொற்று பரவும் வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய வரும் ஜூலை மாதம் 19ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் மேலும் அடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Pfizer-BioNTech அல்லது மாடர்னா தடுப்பூசிகளை இரண்டு டோஸ் பெற்று இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு நபர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக கருதப்படுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் செல்லுபடியாகும் கொரோனா நெகடிவ் சான்றிதழ்கள் வைத்திருப்பவர்களும் ஐந்து பேர் கொண்ட குழுக்களில் பங்கேற்கலாம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 12ம் தேதி முதல் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றாக அமர்ந்து உண்ணலாம் என்று அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts