TamilSaaga
China Town Complex

சிங்கப்பூரின் Night Safari, China Town Complex சென்றவர்கள் கவனத்திற்கு..

சிங்கப்பூரின் Night Safari, China Town Complex போன்ற இடங்களுக்கு சென்றவர்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சிங்கப்பூரில் உள்ள China Town Complex மற்றும் Night Safari உள்ளிட்ட வேறு சில இடங்களுக்கு சென்றதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட இடங்களுக்கு செல்லாமல் தவிர்க்க வேண்டியது இல்லை என்றும் கூறியுள்ளது.

அந்த இடங்கள் பற்றிய விவரங்களையும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

புக்கிட் மேரா வியூ (கிம் சான் லெங்) காப்பி கடை, புக்கிட் மேரா வியூ ப்ளாக் 116, கடோங் வி கடைத்தொகுதி NTUC FairPrice கடை, ஜங்ஷன் 10 கடைத்தொகுதி Sheng Siong கடை, Fu Lu Shou காம்ப்ளக்ஸ் மற்றும் கடோங் கடைத்தொகுதி ஆகிய இடங்களுக்கு சென்று வந்தவர்கள் அடுத்த 14 நாட்கள் தங்களது உடல்நலத்தை மிகுந்த கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் சளி, காய்ச்சல் மற்றும் தொண்டை வலி போன்ற ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Related posts