TamilSaaga

திடீரென்று அறிவிக்கப்பட்ட இரவுநேர ஊரடங்கு : அபுதாபி எடுத்த அதிரடி முடிவு

நாட்டின் பல பகுதிகள் சுற்றுலாவிற்காக திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகராக விளங்கும் அபு தாபியில் கொரோனா வைரஸ் காரணமாக இரவு நேர லாக் டவுனை அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை பிற்பகுதியில் வெளியான அறிவிப்பின்படி திங்கள்கிழமை தொடங்கி ஒவ்வொரு நாளும் காலை 12 மணி முதல் 5 மணி வரை நீடிக்கும் என்று அரசு நடத்தும் WAM செய்தி நிறுவனம் அறிவித்தது.

அபுதாபியின் அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரழிவுக் மேலாண்மை நாடு தழுவிய அளவில் ஒரு தடுப்பூசி முகாமினை நடத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பல பகுதிகளில் சுற்றலா தளங்கள் திறந்துள்ள இந்த நேரத்தில் கடந்த ஓராண்டாகவே துபாய் போன்ற ஐக்கிய அரபு அமீரக நாடுகள் சில சோதனைகளை சந்தித்து வருகின்றது.

இந்நிலையில் UAEயின் தலைநகராக விளங்கும் அபு தாபியில் தற்போது இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

Related posts