சிங்கப்பூரில் உள்ள சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பயன்படுத்துவதற்கான Pfizer-BioNTech/Comirnaty பெருந்தொற்று தடுப்பூசியின் அங்கீகாரத்தை நீட்டித்துள்ளது, இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள் : தமிழ் மக்கள் மனதை விட்டு நீங்காத “சிங்கப்பூர்” ஆனந்த கண்ணன்
“இந்த தடுப்பூசி முறையானது 21 நாட்கள் இடைவெளியில் இரண்டு-டோஸ் முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும். ஆனால் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு (30 மைக்ரோகிராம்கள்) பயன்படுத்தப்படுவதை போல அதைவிட குறைந்த டோஸில் (10 மைக்ரோகிராம்கள்) குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது” என்று HSA தெரிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 10) பிற்பகுதியில் இந்த செய்தி வெளியீடு அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்டவர்களுக்குப் பயன்படுத்த பெருந்தொற்று தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டது இதுவே முதல் முறை.
“சிங்கப்பூரின் HSA-ன் மருந்துகள் ஆலோசனைக் குழு மற்றும் தொற்று நோய்கள் நிபுணர்கள் குழுவின் இரண்டு குழுக்களின் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, HSA தரவுகளின் முழுமையான மதிப்பீட்டை நடத்தியது” என்று நிறுவனம் கூறியது. “தற்போதைய தரவுகளின் அடிப்படையில், இளம் மக்களில் பயன்படுத்துவதற்கான அபாயங்களை விட நன்மைகள் அதிகமாக உள்ளன, மேலும் தடுப்பூசி தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரநிலைகளை பூர்த்தி செய்கின்றது” என்று கூறப்படுகிறது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு Pfizer-BioNTech/Comirnaty கோவிட்-19 தடுப்பூசியின் குழந்தைகளுக்கான டோஸ்களைப் பயன்படுத்த பெருந்தொற்று தடுப்பூசி குறித்த நிபுணர் குழுவின் பரிந்துரையை பல அமைச்சக பணிக்குழு ஏற்றுக்கொண்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.