TamilSaaga

சிங்கப்பூரில் 1076 கடைக்காரர்களுக்கு 70,000 வெள்ளி நிதி உதவி – Mountbatten எம்.பி திரு. லிம்

சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சி நகர சபைகளால் நிர்வகிக்கப்படும் எட்டு சந்தைகள் மற்றும் உணவு மையங்களில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் பெருந்தொற்று கிளஸ்ட்டர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் உள்ள சில இடங்களுக்கு நிதி உதவிகள் அளிக்கப்படவுள்ளன.

இந்த கடைக்காரர்கள் தங்கள் சேவை மற்றும் பாதுகாப்புக் கட்டணங்கள், தற்காலிக தொழில் உரிமக் கட்டணங்கள் முழு மூடுதல் காலத்திற்கும் தள்ளுபடி செய்யப்படுவார்கள் என்று 15 பிஏபி நகர சபைகளின் ஒருங்கிணைப்பு தலைவர் திரு லிம் பயோ சுவான் கூறினார். பாதிக்கப்பட்ட சந்தைகள் மற்றும் உணவு மையங்கள் பெருந்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தவும், வளாகத்தை சுத்தம் செய்ய அனுமதிக்கவும் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மொத்தத்தில், இந்த திட்டத்தின் அடிப்படையில் 1,076 ஸ்டால் வைத்திருப்பவர்களுக்கு சுமார் 70,000 வெள்ளி அளிக்கப்படும் என்று மவுண்ட்பேட்டன் எம்.பி., திரு லிம் நேற்று சனிக்கிழமை (ஜூலை 31) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இது சந்தை மற்றும் ஹாக்கர் ஸ்டோல் ஹோல்டர்களுக்கு அரசாங்கம் அளித்த ஆதரவை விட கூடுதலாக வழங்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார். இது கட்டுப்பாடுகளால் ஏற்படும் சவால்களைச் சமாளிக்க எங்கள் ஸ்டால் ஹோல்டர்களுக்கு ஒருவித நிதி நிவாரணத்தை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts