TamilSaaga

உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் எலிகளின் கழிவு – 15,000 வெள்ளி அபராதம் விதித்த SFA

சிங்கப்பூரில் ஒரு உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் உணவு சேமிப்பு மற்றும் செயலாக்கப் பகுதிகளில் எலிகளின் கழிவுகள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்ததைத் நிலையில் அந்த நிறுவனத்திற்கு 15,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி டெங் குவான் உணவுத் தொழிற்சாலைகளின் ஆய்வின் போது “பல சுகாதார குறைபாடுகளை” கண்டறிந்ததாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்த குறைபாடுகளில் வளாகத்தின் மோசமான பராமரிப்பு, முறையற்ற உணவு சேமிப்பு மற்றும் உணவு பேக்கிங்கின் போது மாசுபடுவதைத் தடுக்கத் தவறியது ஆகிய குற்றச்சாட்டுகள் அந்த நிறுவனத்தின் மீது சாட்டப்பட்டுள்ளது. “உணவுப் பாதுகாப்பு என்பது கூட்டுப் பொறுப்பாகும், ஏனெனில் உணவுச் சங்கிலியில் எங்கும் உணவு மாசுபடலாம்” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைத்து உணவு ஆபரேட்டர்களும் தங்கள் வளாகங்கள் சுத்தமாகவும் நன்கு பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும், சரியான உணவு பாதுகாப்பு மேலாண்மை குறித்து ஊழியர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்படவேண்டும் என்றும் SFA கூறியது.

விதிமுறைகளை பின்பற்றாத அல்லது உணவு சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு தேவைகளுக்கு இணங்காத உணவு ஆபரேட்டர்கள் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் SFA தெரிவித்துள்ளது. இந்நிலையில் முறையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காத அந்த நிறுவனத்திற்கு 15,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related posts