TamilSaaga

தமிழ் மக்கள் மனதை விட்டு நீங்காத “சிங்கப்பூர்” ஆனந்த கண்ணன் : கடந்து சென்ற பாதையும், பெற்ற புகழும்

சன் டிவி மற்றும் சன் மியூசிக் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பிரபலமானவர், ஆனந்த கண்ணன். கிராமியக் கலைகள் மீதான ஆர்வத்தால் நமது சிங்கப்பூரில் குடியேறியவர். 90ஸ் கிட்ஸ்களுக்கு விருப்பமான தொகுப்பாளர் என்று அறியப்பட்டவரும், பல்வேறு கிராமப்புற கலைகளை தொடர்ந்து சர்வதேச அளவில் அரங்கேற்றியவருமான ஆனந்த கண்ணன் 85 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் VTL திட்டத்தில் மாற்றமில்லை

சிங்கப்பூர் தமிழன் ஆனந்த கண்ணன். இவர் நமது சிங்கப்பூரில் ஒளிபரப்பாகி வந்த வசந்தம் டிவி சேனலில் தொகுப்பாளராக இருந்து வந்தார். அதன் பின்னர் ரேடியோ ஜாக்கியாக சென்னை வந்த இவர் சன் ம்யூசிக்கில் தொகுப்பாளராகவும் ஆனார். விக்ரமாதித்தன் என்ற சீரியலில் நடித்து 90’ஸ் குட்டிகளின் பேவரைட் ஆனார். இவர் பேட்டி காண்பதாக இருந்தால், உச்ச நட்சத்திரங்கள்கூட குஷியாவார்கள்.

2000க்கு பின் தொலைக்காட்சிகள் புதிய வடிவம் எடுத்த காலம். எஸ்சிவி என்ற பெயரில் இயங்கி வந்த சேனல் சன் மியூசிக் என்ற புதுப்பொலிவு பெற்று தமிழ் மீடியா உலகில் புரட்சியை ஏற்படுத்திய காலம். பல புதிய விஜேக்கள் தோன்றி பாடல்களை ஒளிபரப்புவது.. பிளேடு தினா, சுரேஷ், மகாலட்சுமி, ஆடம்ஸ், அஞ்சனா என்று பலர் பிரபலம் அடைந்த காலம் அது. அதில் மூத்த விஜேவாக வலம் வந்தவர்தான் ஆனந்த கண்ணன்.


மீடியா உலகின் பிரபலமான விஜேவாக, ஸ்டைலிஷ் நபராக அறியப்பட்டவர். நடிகர் விஜய் தொடங்கி பல்வேறு பிரபலங்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பராகவும் இருந்தார். சாதாரண பாடல் ஒளிபரப்பும் நிகழ்ச்சி என்றாலும், அதில் இவரின் குறும்புத்தனமான பேச்சு மக்களை அதிகம் கவர்ந்தது. கெரியரில் உச்சத்தில் இருக்கும் போதே சொந்த பிஸ்னஸை கவனிக்க வேண்டும் என்று ஆனந்த கண்ணன் விஜே உலகில் இருந்து வெளியேறினார்.

கடந்த சில வருடங்களாக ஆனந்த கண்ணன் சிங்கப்பூரில் வசித்து வந்தார். தமிழர்களின் கிராமிய கலைகள் மீது மிகுந்த பற்று கொண்ட இவர், சிங்கப்பூரில் இது தொடர்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். நிறைய விஜே வாய்ப்புகள் தேடி வந்த போதும் கூட கிராமிய கலை நிகழ்ச்சிகளை உலகம் முழுக்க கொண்டு செல்வதில் இவர் ஆர்வமாக இருந்தார். முக்கியமாக சிந்துபாத் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இருந்ததால் நிறைய சீரியல் வாய்ப்புகளும் இவருக்கு தேடி வந்தது. வெங்கட் பிரபுவின் சரோஜா படத்திலும் மேலும் ஒரு படத்திலும் ஹீரோவாக நடித்தார்.

ஆனால் அந்த துறைகளில் மீண்டும் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து சிங்கப்பூரில் கலை பணிகளை செய்து வந்தார். அதோடு மேடை நாடகம், நடனம், பறையிசை கலை என்று மற்ற துறைகளிலும் கவனம் செலுத்தினார். சிங்கப்பூரில் இருக்கும் தமிழர்களுக்கு இது தொடர்பாக பல்வேறு வகுப்புகளையும் இவர் எடுத்து வந்தார். இந்த நிலையில்தான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு ஆசன குடல் புற்றுநோய் ஏற்பட்டது.


குடலுக்கு அருகே இருக்கும் குழாய்களில் ஏற்படும் புற்றுநோய் ஆகும் இது. மிக மிக அரிதாக ஏற்படும் இந்த புற்றுநோய் Cholangiocarcinoma அல்லது bile duct cancer என்று அழைக்கப்படுகிறது. இதை குணப்படுத்துவதும், சிகிச்சை அளிப்பதும் மிக மிக கடினமான விஷயம். பொதுவாக 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் இந்த ஆசன குடல் புற்றுநோய் ஏற்படும் என்றாலும் கூட சமயங்களில் வயது குறைவானவர்களுக்கும் இது ஏற்படுகிறது.

மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகள் ஏற்பட்டாலும் கூட சில சமயங்களில் அறிகுறியே இல்லாமல் மிகப்பெரிய புற்றுநோயாக இது உருவெடுக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. புகைபிடித்தல், மது தொடங்கி ஜெனிடிக்ஸ் காரணம் வரை பல்வேறு விஷயங்களால் இந்த ஆசன குடல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கல்லீரல் தொடர்பான நோய்கள் கூட இதை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

இந்த அரிதான புற்றுநோய் தாக்கிய காரணத்தால்தான் ஆனந்த கண்ணன் உயிரிழந்தார். நமது சிங்கப்பூரை சேர்ந்த தொகுப்பாளினி ராணி என்பவரை மணந்து இவருக்கு பெண் குழந்தை உள்ளது.

கதை சொல்லியான ராணி, ஆனந்த கண்ணனுடன் இணைந்து கிராமியக் கலைகளையும் பயிற்றுவித்தார். இவர்களின் ஒரே மகளான அவா கண்ணன் கல்லூரியில் படிக்கிறார். கிராமியக்கலைகளில் அனுபவம் பெற்ற மூத்த கலைஞர்களைத் தேடிச்சென்று அருகிவரும் பல்வேறு கலைகளைக் கற்றுக்கொண்டு, தன் குழுவினருக்கும், பள்ளி மாணவர்களுக்கும் பயிற்சி அளிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் ஆனந்த கண்ணன்.

“ஸ்கூல் காலத்திலேயே மாணவர்களுக்கு கிராமியக்கலைகளைப் பயிற்றுவிக்கும் முயற்சியைச் செய்திட்டிருந்தார். உலகின் பல நாடுகள்லயும் இந்த முயற்சியை விரிவுபடுத்தணும்ங்கிறது ஆனந்த கண்ணனின் கனவு. அதுக்காகவே, தமிழ்ல முன்னணி சேனல்கள்ல இருந்து தொடர்ந்து வாய்ப்புகள் வந்தும்கூட, அதையெல்லாம் ஏற்க மறுத்துட்டார். கண்ணை மூடி திறப்பதற்குள் நடந்ததுபோல மூணே மாதங்கள்ல எல்லாமே முடிஞ்சுடுச்சு. ஆனந்த கண்ணனோட இழப்பை ஏத்துக்க கஷ்டமா இருக்கு. அவரோட குடும்பத்தினரும், குழுவினரும் ஆனந்த கண்ணனின் கனவுகளை நிறைவேற்ற நிச்சயமா உழைப்பாங்க” என்கின்றனர், அவரது நெருங்கிய நண்பர்கள்.

ஆனந்த கண்ணன் குறித்து அவரது நண்பர்கள் மேற்குறிய தகவல்கள் விகடன் நிறுவனம் வெளியிட்டதாகவும்

“சினிமா நடிப்பு, நிகழ்ச்சித் தொகுப்பாளராக வேலை செய்றப்போ, பலரையும் மகிழ்ச்சிப்படுத்தலாம். அது அந்தத் தருணத்துடன் முடிஞ்சுடும். ஆனா, இப்போ என் குழுவினருடன் நான் செய்ற ஆத்மார்த்தமான மற்றும் அர்த்தமுள்ள பணிகளால், வாழ்நாள் தாண்டியும் என் பெயர் நீண்டகாலம் வாழும். அதனால, தற்சமயம் என் உயிர் போனாலும் சந்தோஷப்படுவேன்” என ஒரு பேட்டியின் போது மகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார், ஆனந்த கண்ணன். அதே போல், அவர் மறைந்த பின்னும் ஆனந்த கண்ணன் பெயர், பயிற்றுவித்த கிராமப்புற கலைகளால் உலகம் முழுவதும் நிலைத்து நிற்கும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts