TamilSaaga

சிங்கப்பூர் – மலேசியா : ஒரே நேரத்தில் இருநாட்டிலும் நடந்த அதிரடி சோதனை – சிக்கிய 2 மோசடி கும்பல்

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கைக்குப் பிறகு, வேலை மற்றும் வைப்புத் தொகை மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு நாடுகடந்த மோசடி கும்பல்கள் கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூர்க் காவல் படை (SPF) நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 10) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் 100க்கும் மேற்பட்ட வேலை மற்றும் வைப்பு தொகை மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களை இந்த மோசடி கும்பல்கள் குறிவைத்துள்ளதாக நம்பப்படுகிறது. மேலும் இந்த மோசடி வேளைகளில் சுமார் 1.5 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக SPF தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : குழந்தைகளுக்கு பெருந்தொற்று தடுப்பூசி

இந்த வழக்கு தொடர்பாக சிங்கப்பூர், ஜோகூர் மற்றும் கோலாலம்பூரில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன, இதன் விளைவாக சிங்கப்பூரில் ஏழு பேரும் மலேசியாவில் எட்டு பேரும் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய இரு நாடுகளிலும் பாதிக்கப்பட்டவர்களை மோசடி கும்பல்கள் குறிவைத்தது என்றும், மேலும் அவர்களின் குற்றவியல் வருமானத்தை மலேசியாவில் வைத்திருந்ததாகவும் முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு அக்டோபர் முதல் சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்து வேலை மோசடிகளில் புதிய மாறுபாடுகளைக் கண்டதாக SPF கூறியது. இந்த மோசடிகளில் ஒரு மோசடி கும்பல் பல்வேறு சமூக ஊடக தளங்களில் விரைவான பணத்தை வழங்கும் வேலை விளம்பரங்களை இடுகையிடுவது போன்ற சில மோசடி வேளைகளில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கூட்டு நடவடிக்கையானது SPF மற்றும் Royal Malaysia Police (RMP) ஆகியவற்றுக்கு இடையேயான “விரிவான ஒத்துழைப்பு” மற்றும் தகவல் பகிர்வைத் தொடர்ந்து நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் ஒரே நேரத்தில், CAD மற்றும் ஏழு போலீஸ் நிலப் பிரிவுகளின் அதிகாரிகள் 17 முதல் 44 வயதுடைய ஆறு ஆண்களையும் ஒரு பெண்ணையும் கைது செய்தனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts