சிங்கப்பூரில் உணவு டெலிவரி செய்யும் பெரும்பாலான பைக் ஓட்டுநர்கள் முறையான பெர்மிட் மற்றும் பாஸ் இல்லாமல் வேலை செய்பவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.2018 ஆம் ஆண்டு முதல் இதுவரை வெளிநாட்டை சேர்ந்த பெரும்பாலான டிரைவர்கள் முறையான பெர்மிட் இல்லாமல் வேலை செய்வதாக மனிதவள அமைச்சகத்திற்கு 163-க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன. எனவே இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதில் அளித்துள்ளார்.
சட்டவிரோதமாக முறையான அனுமதி இல்லாமல் டெலிவரி டிரைவராக வேலை பார்க்கும் வெளிநாட்டவர்களை சோதிக்க ஏதேனும் சோதனைகள் நடத்தப்படுகின்றதா எனவும்,அனுமதி இல்லாமல் பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு தண்டனைகள் விதிக்கப்படுகின்றதா எனவும், இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதில் அளித்த மனித வளத்துறையின் அமைச்சர் இதுவரை 10 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் .மேலும், அனுமதி இல்லாமல் வெளிநாட்டவரை பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு 20000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும் இந்த தண்டனை முதலாளிகளுக்கு மட்டுமல்லாமல் டெலிவரி டிரைவராக வேலை செய்யும் நபர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவித்தார்.
நம் நண்பர்கள் பெரும்பாலானோர் சிங்கப்பூரில் டிரைவராக வேலை பார்ப்பதால் முடிந்த அளவிற்கு இந்த தகவலை தங்கள் நண்பர் வட்டாரத்தில் தெரிவித்தால் பலருக்கும் உபயோகமாக இருக்கும்.