TamilSaaga

120 நாட்களை தாண்டிய skill டெஸ்ட் ரிசல்ட்… எப்போது வரும்? சிங்கப்பூர் செல்ல என்ன நிலைமை?

சிங்கப்பூர் செல்ல பெருவாரியான ஊழியர்கள் பரிந்துரைப்பது என்னவோ skilled testனை தான். ஆனால் கடந்த சில மாதமாகவே இந்த நிலைமை தலைக்கீழாக மாறி இருக்கிறது. இதுகுறித்து விசாரித்து பார்த்ததில் சில முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சிங்கப்பூரில் அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்ட்டியூட்களில் அட்மிஷன் போட்டு 60 நாட்களுக்கு பயிற்சி எடுத்து மெயின் டெஸ்ட் முடித்தவுடன் ரிசல்ட் வந்தவுடன் சிங்கப்பூர் சென்று வேலைக்கு சேர்ந்து விடலாம் என்பதே இருக்கும். ஆனால் சமீபகாலமாக இருக்கும் பிரச்னையால் டெஸ்ட் எழுதிய 120 நாட்களை கடந்தும் ரிசல்ட் இன்னும் வரவே இல்லை. குறிப்பிட்ட தேதி கூட தெரிவிக்கப்படாமல் இருக்கிறது.

இதையும் படிங்க: சிங்கப்பூர் வேலைக்கு Skill அடிக்காமல் வரணுமா? அப்போ PSA தான் உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ்… இத படிங்க முத!

தமிழ்நாட்டிலோ தீபாவளிக்கு பிறகு மூடப்பட்ட இன்ஸ்ட்டியூட்கள் எல்லாம் சமீபகாலமாக திறக்கப்பட்டு வருகிறது. பயிற்சிகளும் தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. சிங்கப்பூர் தரப்பில் விசாரிக்கும் போது இந்த மாத இறுதிக்குள் அக்டோபர் மீதம் இருக்கும் நாளுக்கு ரிசல்ட் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்கிறார்கள்.

தமிழ்நாட்டு இன்ஸ்ட்டியூட்டினை தொடர்பு கொண்டு விசாரிக்கும் போது, தங்களுக்கே இது குறித்த தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை. ரிசல்ட் வந்தவுடன் தான் எங்களுக்கும் அறிவிக்கப்படும். இருந்தும் பயிற்சிகள் மட்டும் தற்போதைய அளவில் தொடங்கப்பட்டதாக கூறினர்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வொர்க் பெர்மிட் வேலைக்கு செல்ல இருக்கீங்களா… இத்தனை கட்டுப்பாடுகள் இருக்கு… MOM சொல்வது என்ன?

இதில் இன்னொரு பெரிய பிரச்னையாக ரிசல்ட் வந்த பலரும் இன்னமும் சிங்கப்பூர் வந்து சேரவில்லை. இவர்கள் வந்து சேரும் வரை கூட ரிசல்ட் நிறுத்தி வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் ரிசல்ட் எந்த நேரமும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் இந்த மாத பட்ஜெட் அறிவிப்புக்கு பின்னர் இதில் தெளிவான விளக்கம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அட்மிஷன் போட இருப்பவர்கள் முடிந்தவரை இப்போது அட்மிஷன் போடாமல் இருப்பதே நல்லது. அதையும் மீறி சிங்கப்பூர் வர ஸ்கில் அடிக்க அட்மிஷன் போட நினைத்தால் பிரபலமான இன்ஸ்ட்டியூட்களில் கம்மியான தொகையை முதலில் அட்மிஷன் போடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஸ்கில் மட்டுமல்லாமல் இந்த பிரச்னையால் எல்லா வொர்க் பாஸ்களிலுமே பிரச்னை நிலவுகிறது. சிங்கப்பூர் வேலைக்கு வர இன்னும் 1 அல்லது 2 மாதங்களில் பிரச்னை முடிந்தவுடன் ஏற்பாடு செய்யலாம். அதுவே உங்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts