TamilSaaga

Exclusive : சொந்த ஊரில் தற்கொலை செய்து கொண்ட உடன்பிறந்த சகோதரன்.. இறுதிச்சடங்கிற்கு கூட போக முடியாமல் சிங்கப்பூரில் தவிக்கும் அண்ணன் – இவ்வளவு தானா இந்த வெளிநாட்டு வாழ்க்கை!

வெளிநாட்டு வாழக்கை என்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு எந்த அளவிற்கு ஆடம்பரமாக தோன்றுகிறதோ அதே அளவிற்கு வலிகள் பல நிறைத்திருப்பது என்பதை பல தாருங்கள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றது என்று தான் கூறவேண்டும்.

அந்த வகையில் நமது சிங்கப்பூரில் சுமார் 12 ஆண்டுகளாக வேலை செய்து வரும் வீரையன் என்பவற்றின் வாழ்க்கையில் தற்போது சோக நிறைந்த ஒன்றாக மாறியுள்ளது என்று தான் கூறவேண்டும். சிங்கப்பூரில் வீரையன் அவர்களுடன் பணிபுரியும் நமது தமிழ் சாகா சிங்கப்பூர் வாசகரும் வீரையனின் மிகநெருங்கிய நண்பருமான திரு. மணி சரண் நமக்கு அளித்த பிரத்தியேக தகவல்கள் பின்வருமாறு..

பாலசுப்ரமணியன் என்பவரின் மகன் தான் வீரையன், வேதாரண்யம் பகுதியை சேர்ந்தவர் இவர் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு பல தொழிலாளர்களை போல தனது குடும்ப நலன் கருதி சிங்கப்பூருக்கு பணி நிமித்தமாக வந்தவர்.

தனது குடும்பத்திற்காக அயராது உழைத்த இவருக்கு மீனாட்சி சுந்தரம் என்ற தம்பி ஒருவரும் உண்டு. தனது குடும்பத்திற்காக ஒரு வீடு கட்டி முடித்தவுடன் தம்பிக்கும் நல்ல முரையில் திருமணம் செய்யவேண்டும் என்ற ஆசையோடு அனுதினமும் உழைத்து வந்துள்ளார் வீரையன். இந்த நிலையில் தான் இன்று காலை அவருக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

சிங்கப்பூரில் உயிரிழந்த தமிழக தொழிலாளி குமரவேல் ராஜா.. வெளிநாட்டுக்கு அனுப்பி மகனை பலி கொடுத்த அவரது குடும்பத்தின் தற்போதைய நிலை என்ன?

வீரையனின் குடும்பத்தில் ஏற்பட்ட சிறு சண்டை காரணமாக அவருடைய தம்பி மீனாட்சி சுந்தரம் நேற்று இரவு தற்கொலை செய்க்கொண்டுள்ளார். அவரது அறையில் தூக்கிட்டுக்கொண்ட மீனாட்சி சுந்தரத்தின் உடலை இன்று காலை தான் அவரது குடும்பத்திரனார் கண்டு அதிர்ந்துள்ளார்.

விஷயம் அறிந்த இங்குள்ள வீரையன் துடித்துப்போக, தம்பி சுந்தரத்தின் உடல் இன்று காலையே அடக்க செய்யப்படவுள்ளதை அறிந்துள்ளார். அவ்வளவு சீக்கிரத்தில் தன்னால் வீட்டுக்கு செல்ல முடியாது என்பதால் தம்பிய இறுதி சடங்கிற்கு பணம் மட்டும் அனுப்பி வைத்துள்ளார் வீரையன்.

தம்பியின் முகத்தை கூட இறுதியாக பார்க்கமுடியாமல் அவர் தன்னுடைய அறையில் கதறி அழுததாக அவருடைய நண்பர் மணி சரண் நம்மிடையே கூறினார். நண்பர்கள் அனைவரும் இணைந்து அவரை தேற்றி வருவந்தாகவும் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் ‘ஷவர்மா’ விரும்பி சாப்பிடும் நபரா நீங்க? – இந்தியாவில் +1 மாணவி இறந்ததற்கு காரணம் உணவில் இருந்த ‘ஷிகெல்லா’ வைரஸ் என்பதை மறந்துடாதீங்க!

உடன்பிறந்த சகோதரனின் அகால மரணத்திற்கு கூட தாயகம் செல்ல முடியாமல் மிகக்கடினமான மனநிலையில் தற்போது வீரையன் உள்ளதாக மணி கூறினார். உண்மையில் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் ஆடம்பரமாக உள்ளார்கள் என்று நாம் கூறினாலும், உண்மையில் அவர்கள் அனுபவிக்கும் கொடுமையை வெறும் சொற்களால் கூறிவிட முடியாது.

தொற்று காரணமாக வீரையன் கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு இன்னும் தனது சொந்தங்களை பார்க்க வேதாரண்யம் செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts