TamilSaaga

67 லட்சம் பயணிகள்.. 50 ஆயிரம் விமானங்கள் – வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்க உலகின் மாபெரும் “மிஷன்” நடத்திய இந்தியா!

கொரோனா தொற்று 2019 இறுதியில் சீனாவில் தோன்றினாலும், இந்தியாவில் 2020ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் தான் ஊடுருவத் தொடங்கியது. அங்கு முதலில் ஒரு வாரம் லாக் டவுன், பிறகு 10 நாட்கள் லாக் டவுன் என்று படிப்படியாக லாக் டவுன் அதிகரிக்கப்பட, மக்களும் விடுமுறையை ஜாலியாக என்ஜாய் பண்ண, போக போக அந்த விடுமுறையே கொடுமையான முறையாகியது. மக்கள் வீட்டுக்குள் முடங்கினர். நல்ல காரியம், கெட்ட காரியம் என்று எதுவும் நடைபெற முடியவில்லை. வீடுகளில் இருந்து சாலைக்கு வருவதற்கே அனுமதி வேண்டும் என்ற சர்வாதிகார நிலை ஏற்பட்டது. அந்த சர்வாதிகாரத்தை கொரோனா எனும் வைரஸ் கொண்டு வந்தது.

பேருந்து சேவை முதல் விமான சேவை வரை அனைத்தும் நிறுத்தப்பட்டது. நாடே நிசப்தமானது. உலகமே நிசப்தமானது. இதில் பல இந்தியர்கள் சிங்கப்பூர் உட்பட வெளிநாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மேலும் படிக்க – VTL திட்டம் மூலம் யார் யார் இப்போது சிங்கப்பூர் செல்ல முடியும்? யார் போக முடியாது? – ஆதாரத்துடன் களத்தில் இருந்து Exclusive செய்தி

இந்நிலையில், இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த ஜன.21, 2022 வரை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானங்களின் செயல்பாட்டு விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி,

வெளிநாடுகளில் இருந்து இந்தியா சென்ற விமானங்கள் – 25,097
வெளிநாடுகளில் இருந்து இந்தியா அழைத்துச் செல்லப்பட்ட மொத்த பயணிகள் – 3,606,650
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற விமானங்கள் – 25,113
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற பயணிகள் – 3,141,858
ஜன.21 வரையில் இயக்கப்பட்ட மொத்த விமானங்கள்: 50,210
ஜன.21 வரையில் விமானங்களில் அழைத்துச் செல்லப்பட்ட பயணிகள்: 6,748,508

என்று புள்ளிவிவரம் வெளியிடப்பட்டது.

வந்தே பாரத் திட்டத்தில் இந்தியாவிலேயே திருச்சிக்கு மட்டும் அதிக அளவில் விமான சேவை வழங்கப்பட்டது. கடந்த அக்.31-ம் தேதி வரை சிங்கப்பூரிலிருந்து 54,366 பேர், மலேசியாவிலிருந்து 34,323 பேர் திருச்சிக்கு சென்றுள்ளனர். இவர்களில் அக்.31 வரை சிங்கப்பூருக்கு 19,601 பேர், மலேசியாவுக்கு 5,150 பேர் மட்டும் திரும்பிச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts