TamilSaaga

சிங்கப்பூரில் பெருந்தொற்றுக்கு 34 வயது உக்ரேனிய நபர் பலி – 38ஆக உயர்ந்த இறப்பு எண்ணிக்கை

சிங்கப்பூரில் பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்த 34 வயதான உக்ரேனிய கடற்படை வீரர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 1) சிங்கப்பூரில் மரணித்துள்ளார் என்று சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று திங்களன்று தெரிவித்தது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அந்த நபர், கடந்த ஜூலை 29 அன்று சிங்கப்பூர் வந்த கப்பலில் வந்துள்ளார்.

கடந்த ஜூலை 31ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி மரணித்துள்ளார். இது பெருந்தொற்று காரணமாக சிங்கப்பூரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 38ஆக உயர்த்தியுள்ளது. மேலும் சிங்கப்பூரில் மிகக்குறைந்த வயதில் பெருந்தொற்றுக்கு பலியான நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் நேற்று திங்கள்கிழமை நண்பகல் வரை 106 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இதில் 25 பேர் முந்தைய வழக்குகளுடன் எந்த தொடர்பும் இல்லை. மேலும் 65 நோய்த்தொற்றுகள் முந்தைய வழக்குகளுடன் இணைக்கப்பட்டு தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 16 வழக்குகள் முந்தைய தொற்றுநோய்களுடன் இணைக்கப்பட்டு கண்காணிப்பு சோதனை மூலம் கண்டறியப்பட்டன.

நேற்று வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த ஐந்து பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts