சிங்கப்பூரில் வொர்க் பாஸில் வரும் ஊழியர்களுக்கு பலவகையான அனுபவங்கள் இங்கு தினமும் கிடைத்து கொண்டு தான் இருக்கிறது. நல்ல அனுபவங்கள் பெறும் ஊழியர்கள் வருடக்கணக்காக வாழ்ந்து வருகின்றனர். ஏமாற்றம், பிரச்னை என சிக்கும் ஊழியர்கள் இந்தியாவில் இருந்து திரும்புவதும், வரவே முடியாமல் போவது தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.
முதலில் சிங்கப்பூர் வருவதற்கு உங்களின் முதல் படி ஏஜென்ட் தான். அவரை நீங்க சரியாக தேர்ந்தெடுத்தாலே நடக்க இருக்கும் பாதி பிரச்னைகள் இல்லாமல் செய்து விடலாம். விளம்பரத்தில் பார்த்தேன். ஆபிஸ் பெரிசா இருக்குனு பார்க்காதீங்க. தெரிந்த எல்லாரிடமும் விசாரித்து ஒரு ஏஜென்ட்டினை தேர்ந்தெடுங்க. அவர் அனுப்பிய ஆட்களை முடிந்தால் தொடர்பு கொண்டு பேசிப்பாருங்கள். அதிலேயே அவர் குறித்து பெரும்பாலும் தெரிந்து விடும்.
அவர் சரியாக இருக்கும் பட்சத்தில் அவரிடம் உங்களின் கல்வி தகுதியை பார்த்து வேலை பார்க்க சொல்லுங்கள். சிலர் டெஸ்ட் அடித்து பெரிய தொகையை செலவு செய்து விட்டு சிங்கப்பூர் சென்றால் குடும்பத்தினை பிரிந்து இருக்க முடியுமா என்ற சந்தேகம் இருக்கும். அப்படி ஒரு நிலைமையில் நீங்க இருந்தால் இந்த பாஸினை ட்ரை செய்து பார்க்கலாம்.
அது தாங்க TEP. இதை Training Employment Pass என்று அழைக்கின்றனர். இது மாணவர்களுக்கு பயிற்சிக்கும், வெளிநாட்டு ஊழியர்களுக்கும் கூட கொடுக்கப்படுகிறது. இந்த பாஸில் நீங்க சிங்கப்பூர் வர வேண்டும் என்றால் ஏஜென்ட் கட்டணமாக 1.5 லட்சத்துக்கு மேல் கொடுக்காதீர்கள். உங்களால் சிங்கப்பூரில் 3 மாதம் மட்டுமே இருக்க மட்டும். அதிகப்பட்சமாக ஒரு மாதம் வரை நீட்டித்து தருவார்கள்.
TEP அப்ளே செய்ய கண்டிப்பாக இந்த criteria இருக்க வேண்டும்.
- உங்களின் சம்பளம் $3000 சிங்கப்பூர் டாலராக இருக்க வேண்டும்.
- சிங்கப்பூரில் நன்கு வளர்ச்சி அடைந்த நிறுவனம் உங்களுக்கு ஸ்பான்சர் செய்திருக்க வேண்டும். இது MOMல் இருந்து சொல்லப்பட்ட வழிமுறை.
ஆனால் சில ஊழியர்கள் நிறுவனத்தின் உதவியால் குறைந்த சம்பளத்திலேயே சிங்கப்பூர் வருவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மேலும் இந்த பாஸில் உங்களுக்கு அப்ரூவல் கிடைக்காத பட்சத்தில் TWP ட்ரை செய்யலாம்.
சிலர் இந்த பாஸில் சிங்கப்பூர் வந்து இங்கு நேரடியாக skill டெஸ்ட் அடித்தும் வருகிறார்கள். இந்தியாவை ஒப்பிடும் போது நாட்களின் எண்ணிக்கை வெறும் 3 நாட்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.