TamilSaaga

சிங்கப்பூர் Punggol குடியிருப்பு பகுதி : திடீரென்று அறுந்து விழுந்த கம்பி, அந்தரத்தில் தொங்கிய தொழிலாளர்கள் – கைகொடுத்தது யார் தெரியுமா?

புங்கோலில் அடுக்குமாடி குடியிருப்புக்கு வண்ணம் தீட்டும் இரண்டு தொழிலாளர்கள், அவர்களை தாங்கி நின்ற பலகையின் கேபிள் கம்பி துண்டிக்கப்பட்ட நிலையில் அந்தரத்தில் அவர்கள் சிக்கி தவித்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது. சற்றென்று அவர்கள் வண்ணம் தீட்டிக்கொண்டிருந்த வீட்டுக்கு அருகில் இருந்த வீட்டில் வசிப்பவர்கள் அவர்களை காப்பாற்ற தங்கள் ஜன்னல்களைத் திறந்துள்ளார். புங்கோல், பிளாக் 176D Edge Field Plains பகுதியில் நடந்த இந்த சம்பவத்தின் புகைப்படங்கள், ஒரு 55 வயதுடைய பெண்மணியால் எடுக்கப்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரின் கதவுகள் திறந்தாச்சு! இந்திய ஊழியர்கள் இன்று (பிப்.22) முதல் Entry Approval இல்லாமல் சிங்கப்பூர் வர அனுமதி!

இச்சம்பவம் கடந்த பிப்ரவரி 18 அன்று மாலை 4 மணியளவில் நடந்துள்ளது, கோண்டோலாவைத் (தட்டையான பலகை – Gondola) தாங்கியிருக்கும் கேபிள் கழன்று தளர்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றது. 57 மற்றும் 52 வயது மதிக்கத்தக்க கணவனும் மனைவியும் தங்கள் வீட்டு ஜன்னல்களை திறந்து அந்த இரண்டு தொழிலாளர்களையும் தங்கள் வீட்டிற்குள் இழுத்து காப்பாற்றியுள்ளனர். அவர்கள் ஊடகத்திடம் பேசியபோது “சம்பவத்தின் போது நாங்கள் எங்கள் வீட்டின் அறையில் இருந்தோம். என் மனைவி ஜன்னலுக்கு வெளியே ஒரு உரத்த சத்தம் கேட்டதை அடுத்து என்ன நடந்தது என்பதை அறிய நாங்கள் ஜன்னல் அருகே ஓடினோம்.

மனைவி ஜன்னலைத் திறந்து பார்த்தபோது, வண்ணம் பூசும் தொழிலாளர்கள் இருவர் செங்குத்தான நிலையில் இருந்த ​​கோண்டோலா கண்டுள்ளார். மேலும் எந்த நேரத்திலும் தொழிலாளர்கள் கீழே விழும் அபாயம் இருப்பதை உணர்ந்து உடனடியாக செயல்பட்டு அவர்களுக்கு அருகில் இருந்த தங்கள் அறைக்கதவுகளை திறந்து அவர்களை காப்பாற்றியுள்ளனர்.

உப்பிட்ட மண்ணுக்கு இதுதான் நன்றிக்கடனா? சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டே தீவிரவாத அமைப்புக்கு நிதியுதவி.. பங்கமாக சிக்கிய வெளிநாட்டு ஊழியர்

நல்வாய்ப்பாக நானும் எனது மனைவியும் அந்த நேரத்தில் வீட்டில் இருந்தோம், இல்லையென்றால் அவர்களின் நிலை என்ன ஆகியிருக்குமோ தெரியவில்லை என்று அந்த கணவர் கூறினார். தக்க சமயத்தில் யோசித்து தொழிலாளர்களை காப்பாற்றிய அந்த ஜோடிக்கு தற்போது இணையத்தில் வாழ்த்துக்கள் குவித்து வருகின்றது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts