TamilSaaga

“தினுசு தினுசா ஏமாத்துறாங்க” : அமெரிக்க வாலிபருடன் கூட்டணி – Microsoft நிறுவனத்துக்கே “அல்வா கொடுத்த” சிங்கப்பூர் இளைஞர்

சிங்கப்பூரில் 1,43,144 அமெரிக்க டாலர்கள் (S$1,92,900) மதிப்புள்ள 56 மடிக்கணினிகளைப் பெறுவதற்காக, மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு எதிராக ஒரு அமெரிக்க நபருடன் இணைந்து செயல்பட்டுள்ளார் ஒரு சிங்கப்பூர் வாலிபர். குற்றம் சாட்டப்பட்ட அந்த 20 வயது நபர் தற்போது மடிக்கணினிகள் அனைத்தையும் விற்கப்பட்டுவிட்டதாகவும், அதன் மூலம் வந்த பணத்தில் பிட்காயினை வாங்கியதாகவும் கூறியுள்ளார். ஆனால் 2018ல் பிட்காயின் விலை சரிந்த பிறகு “எல்லாவற்றையும் இழந்ததாகவும்” அந்த நபர் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் Punggol குடியிருப்பு பகுதி : திடீரென்று அறுந்து விழுந்த கம்பி, அந்தரத்தில் தொங்கிய தொழிலாளர்கள் – கைகொடுத்தது யார் தெரியுமா?

இந்த குற்ற செயலில் ஈடுபட்டபோது அவர் 18 வயதிற்குட்பட்டவராக இருந்ததால், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சட்டத்தின் கீழ் அவரது சொந்த தகவல்கள் பாதுகாக்கப்படுவதாகவும் ஆகையால் குற்றவாளியின் பெயரைக் குறிப்பிட முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 22) நீதிமன்றத்தில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஏமாற்ற சதி செய்ததாக ஒரு குற்றச்சாட்டு, உள்பட மேலும் ஏழு குற்றச்சாட்டுகள் அவரது தண்டனையின்போது பரிசீலிக்கப்படும்.

2017ம் ஆண்டு குற்றங்கள் நடந்தபோது குற்றம் சாட்டப்பட்டவருக்கு 16 வயது என்று நீதிமன்றம் கூறியது. மேலும் அவர் ஒரு தனியார் ஆன்லைன் செயலி மூலம் ஒரு அமெரிக்க நபருடன் தொடர்பில் இருந்துள்ளார். ஜஸ்டின் டேவிட் மே என்ற அந்த அமெரிக்க நபரின் வயது குறிப்பிடப்படவில்லை. மின்னணு சாதனங்களை விற்கும் நிறுவனங்களின் Advance Warranty முறையை பயன்படுத்தி மோசடி செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் ஆகஸ்ட் 2017 மற்றும் அக்டோபர் 2017க்கு இடையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் Microsoft Surface மடிக்கணினிகள் ஆன்லைனில் 800 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படுவதைக் கண்டுபிடித்தனர், இது அவற்றின் சில்லறை விலையில் பாதிக்கும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 2017 மற்றும் அக்டோபர் 2017 க்கு இடையில் 56 சந்தர்ப்பங்களில், குற்றம் சாட்டப்பட்டவர் சிங்கப்பூரில் இருந்துகொண்டு, ​​மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் 56 மடிக்கணினிகளுக்கு தவறான வழியில் Advance Warranty முறையை பயன்படுத்தியுள்ளார். அவரது Tampines பிளாட்டில் மடிக்கணினிகளைப் பெற்ற பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் அவற்றை S$1,700 முதல் S$2,500 வரை கரோசெல்லில் விற்றுள்ளார். மொத்தம் 75 மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் மடிக்கணினிகளை அவர் Carousell செயலி மூலம் விற்றுள்ளார். இதே நேரத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு எதிராக செய்த அஞ்சல் மோசடி உள்ளிட்ட குற்றங்களுக்காக கடந்த 2018 ஜனவரியில் அமெரிக்காவில் உள்ள அந்த மே என்ற நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

நான் சிங்கப்பூர் போலீஸ் பேசுறேன்.. “ஆள் தெரியாமல் வந்து சிக்கிய ஆடு” : போலீஸ் உடையில் இருந்தவரை பார்த்து உறைந்துபோன Scammer

இதனையடுத்து மே 2018 இல், சிங்கப்பூர் காவல் படையின் வணிக விவகாரத் துறைக்கு அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவிடமிருந்து (FBI) தகவல் கிடைக்கிறது, அதில் சிங்கப்பூரில் குற்றம் சாட்டப்பட்டவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு எதிராக மோசடி செய்ய அமெரிக்காவில் உள்ள மே உடன் இணைந்து சதி செய்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் அமெரிக்காவின் மே தண்டனை பெற்றுள்ள நிலையில் ஏமாற்றிய தொகையை திரும்ப microsoft நிறுவனத்திற்கு அளிக்கவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த சிங்கப்பூரின் இளைஞரின் தண்டனையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது சிங்கப்பூர் நீதிமன்றம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts